சுவையான கேரட் பாதாம் போளி வீட்டிலயே சுலபமாக செய்து எப்படி தெரியனுமா? தெரியாதவுங்க தெரிஞ்சிகொங்க!

- Advertisement -

மாலை நேரம் ஆகிவிட்டது என்றால் அனைவருக்குமே ஏதாவது சாப்பிடுவதற்கு தோன்றும் ஆனால் அந்த நேரத்தில் சாப்பாடு போட்டு சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்..! ஆனால் நமக்கு வடை, பஜ்ஜி சாப்பிட தோன்றும், சிலருக்கு இனிப்பு சாப்பிட பிடிக்கும். அதற்காக அதிக இனி சாப்பிடால் திகட்டும் அளவிற்கு இருக்க கூடாது. ஓரளவு இனிப்பு இருந்தால் போதுமானத இருக்கும் என்று சொல்வார்கள். அந்தவகையில் மாலை நேரத்தை இன்னும் சுவையாக்க கேரட் பாதாம் போளி செய்யலாம். போளி இந்தியாவில் செய்யப்படும் ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. குறிப்பாக இவை கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் மிகவும் ஃபேமஸ். இது எந்த அளவுக்கு அங்கு ஃபேமஸ் என்றால் இவை இல்லாத திருமண விருந்துகளே அங்கு காண முடியாது எனும் அளவுக்கு. போளி மிகவும் சுவையான பாரம்பரிய சுவைமிக்க இனிப்பு வகை. இது கேரட், வெல்லம், பாதாம் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது பூரணம் செய்து அதனை மைதாமாவில் உள்ளே வைத்து செய்ய வேண்டும்.

-விளம்பரம்-

உங்கள் வீட்டில் உள்ளோர் போளியை விரும்பி சாப்பிடுவார்களா? இதுவரை நீங்கள் வீட்டில் போளி செய்து சுவைத்ததுண்டா? இல்லையென்றால் இன்று மாலை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுங்கள். அதுவும் கேரட் பாதாம் போளியை இன்று செய்யுங்கள். இந்த போளி செய்வது மிகவும் சுலபம். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.இந்த டிஷ்ஷில் இருக்கும் சிறந்த விஷயம் என்னவென்றால், இதை 15 நாட்கள் வரை கூட எடுத்து வைத்திருந்து சாப்பிடலாம். குளிரில் இதமாக மாலை நேரத்தில் சுட சுட ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் இந்த கேரட் பாதாம் போளியை செய்து சாப்பிடுங்கள்.

- Advertisement -
Print
3.50 from 2 votes

கேரட் பாதாம் போளி | Carrot Badam Boli Recipe In Tamil

மாலை நேரம் ஆகிவிட்டது என்றால் அனைவருக்குமே ஏதாவது சாப்பிடுவதற்கு தோன்றும் ஆனால் அந்த நேரத்தில் சாப்பாடு போட்டு சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்..! ஆனால் நமக்கு வடை, பஜ்ஜி சாப்பிட தோன்றும், சிலருக்கு இனிப்பு சாப்பிட பிடிக்கும். அதற்காக அதிக இனி சாப்பிடால் திகட்டும் அளவிற்கு இருக்க கூடாது. ஓரளவு இனிப்பு இருந்தால் போதுமானத இருக்கும் என்று சொல்வார்கள். அந்தவகையில் மாலை நேரத்தை இன்னும் சுவையாக்க கேரட் பாதாம் போளி செய்யலாம். போளி இந்தியாவில் செய்யப்படும் ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. குறிப்பாக இவை கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் மிகவும் ஃபேமஸ். இது எந்த அளவுக்கு அங்கு ஃபேமஸ் என்றால் இவை இல்லாத திருமண விருந்துகளே அங்கு காண முடியாது எனும் அளவுக்கு. போளி மிகவும் சுவையான பாரம்பரிய சுவைமிக்க இனிப்பு வகை. இது கேரட், வெல்லம், பாதாம் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: evening, sweets
Cuisine: Indian
Keyword: Carrot Badam Boli
Yield: 4 People
Calories: 75kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 4 கேரட்
  • 1/2 கப் பாதாம்
  • 1/2 கப் வெல்லம்
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • 2 கப் மைதா மாவு
  • நெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கேரட்டை நன்கு கழுவி தோல் சீவி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
  • பின் பாதாம் பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு காய்ந்ததும் அரைத்த கேரட்‌ விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  • பின் அதனுடன் பாதாம் பொடி, வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு வதக்கி அடுப்பை அணைத்து ஆற‌ விடவும்.
  • ஒரு பவுளில் மைதா மாவு, ஒரு சிட்டிகை உப்பு, நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • பின் இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு சிறிய உருண்டை மாவை எடுத்து அதனுள் கேரட் பூரணம் வைத்து நெய் தடவி போளி தட்டிகொள்ளவும்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து‌ சூடானதும் மிதமான சூட்டில் போளியை போட்டு நெய் ஊற்றி வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான கேரட் பாதாம் போளி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 75kcal | Carbohydrates: 6g | Protein: 4.5g | Fat: 1.2g | Potassium: 320mg | Fiber: 1.5g | Vitamin A: 24IU | Vitamin C: 6.22mg | Calcium: 33mg | Iron: 2.3mg

இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் பருப்பு போளி இப்படி ஒருமுறை செய்து செய்து பாருங்கள்! உண்மையில் அவ்வளவு டேஸ்டாடாக இருக்கும்!