தித்திக்கும் சுவையில் பருப்பு போளி இப்படி ஒருமுறை செய்து செய்து பாருங்கள்! உண்மையில் அவ்வளவு டேஸ்டாடாக இருக்கும்!

- Advertisement -

கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற இனிப்பு வகைகளில் பருப்பு போளி, தேங்காய் போளி முக்கிய பங்கு வகிக்கிறது.  தசரா காலங்களில் அனைவரது வீட்டிலும் கட்டாய பலகாரமாக போளி இருக்கும். பண்டிகை காலங்களில் சர்க்கரை போளி அதாவது  கடலைப்பருப்பும் வெல்லமும் சேர்த்து செய்த சர்க்கரை போளி அதிக அளவில் உண்ணப்படும்.  இப்பொழுது நாம் பருப்பு போளி எப்படி செய்வது என்பதை பார்க்கப் போகிறோம்.

-விளம்பரம்-

இந்திய இனிப்பு வகைகளில் போளி மிகவும் பிடித்த உணவாக மாறிக்கொண்டிருக்கிறது அதிலும் பருப்பு போளியும் ,தேங்காய் போளியும் அனைவரின் மனதிலும் தனி இடத்தை பிடித்துள்ளது.  தீபாவளி பண்டிகை காலங்களிலும் தசரா பண்டிகை காலங்களிலும் பலகாரங்கள் செய்வதில் பருப்பு போளிக்கும் ஒரு தனி இடம் இருக்கிறது.இந்த போளிகள் சுவைப்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கின்றன . 

- Advertisement -

கடலைப்பருப்பு போளி மிக எளிதாக அதி சீக்கிரமாக செய்யக்கூடிய போளி. கடலைப்பருப்பில் வெல்லம் சேர்த்து உண்ணும் பொழுது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். நாவில் வைத்ததும் கரைய கூடிய போளிகள் நாவையும், மனதையும், வயிற்றையும் திருப்திபடுத்துகின்றன.அப்படி கடைகளில் வாங்கி ருசித்த போளியை இனி வீட்டிலும் சுலபமாக செய்து உண்ணலாம். குடும்த்தினரையும் ஆச்சரியபட செய்யலாம். நீங்கள் செய்யும் போளியை சுவைத்து பாராட்டு மழையில் நனைய போகிறீர்கள். வாருங்கள் சுவையான பருப்பு போளி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
No ratings yet

பருப்பு போளி | Dal Poli Recipe In Tamil

கடலைப்பருப்பு போளி மிக எளிதாக அதி சீக்கிரமாக செய்யக்கூடிய போளி. கடலைப்பருப்பில் வெல்லம் சேர்த்து உண்ணும் பொழுது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். நாவில் வைத்ததும் கரைய கூடிய போளிகள் நாவையும், மனதையும், வயிற்றையும் திருப்திபடுத்துகின்றன.அப்படி கடைகளில் வாங்கி ருசித்த போளியை இனி வீட்டிலும் சுலபமாக செய்து உண்ணலாம். குடும்த்தினரையும் ஆச்சரியபட செய்யலாம். நீங்கள் செய்யும் போளியை சுவைத்து பாராட்டு மழையில் நனைய போகிறீர்கள். வாருங்கள் சுவையான பருப்பு போளி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Keyword: Paruppu Poli
Yield: 4
Calories: 285kcal

Equipment

  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 2 கப் மைதா மாவு 
  • 1/4 கப் எண்ணெய்

பூரணம் செய்ய :

  • 1 கப் கடலைப் பருப்பு
  • 1/2 கப் வெல்லம்
  • 1/2 கப் தேங்காய்த் துருவல்
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்

போளி சுடுவதற்கு :

  • 1/4 கப்  நெய்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் மைதா மாவை சேர்த்து அதில் எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த மைதா மாவை நன்றாக இரண்டு மணி நேரம் மூடி தனியே எடுத்து வைக்கவும் .
  • பின் கடலைப்பருப்பை ஊற வைத்து நன்றாக வேகவைத்த எடுத்து கொள்ளவேண்டும். பிறகு  தேங்காய்துருவலை ஒரு கடாயில் இட்டு நன்றாக நீர் வற்றும் வரை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் வெல்லத்தை பாகு போல் காய்ச்ச வேண்டும். வெல்லம் பாகு ஆனதும் வேக வைத்த கடலைப்பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்த வைத்து கொள்ள வேண்டும்.
  • பிறகு கடலைப்பருப்பில்  பாகுகாய்ச்சி வெல்லம் , தேங்காய் துருவல், ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறி சிறிது நேரம் ஆறவிடவும்  ஆறவிடவும்.
  • பிறகு பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அந்ததனுள் பருப்பு பூரணத்தை வைத்து மூடி இரண்டு பக்கமும் இரண்டு எண்ணெய் உறியும் சீட்டுகளை வைத்து சப்பாத்தி போல் திரட்டி எடுக்க வேண்டும் .
  • ஒரு தவாயில் நெய் விட்டு போளியை போட்டு இருபுறமும் நன்றாக சிவந்து வரும் வரை சுட்டு எடுத்து வைத்து போளி மீது நெய் சிறிது ஊற்றி பரிமாறினால் சுவையான பருப்பு போளி தயார்..

Nutrition

Serving: 2nos | Calories: 285kcal | Carbohydrates: 198g | Protein: 12.2g | Fat: 10.3g | Sugar: 0.8g