சுவையான கேரட் பாயாசம் நாக்கில் எச்சில் ஊறக்கூடிய அளவிற்கு மிக அருமையாக இருக்கும்!

- Advertisement -

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த கேரட் பாயாசம் ரெசிபி உங்களுக்கு தான்! இந்த ரெசிபி தென் இந்திய மக்கள் தங்கள் பண்டிகைகளின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் இதை முக்கிய உணவாக செய்து மகிழ்வர். இது கீர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கேரட் பாயாசம் ரெசிபி அதிக பால் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த சுவையான கேரட் பாயாசம் நாக்கில் எச்சில் ஊறக்கூடிய அளவிற்கு மிக அருமையாக இருக்கும். இது அனைத்து பருவங்களுக்கும் மிகவும் பொருத்தமானது.

-விளம்பரம்-

இந்த ரெசிபி கொஞ்சம் இனிமையானதாக இருப்பினும், ஒரு சத்தான ரெசிபி ஆகும். பாயாசம் ரெசிபிகள் பல இந்தியர்களுக்கு பிடித்த சமையல் என்பதால், கேரட் பாயாசம் அனைவருக்கும் பிடித்த ரெசிபியாக உள்ளது. எப்பொழுதும் டீ, காபி, பால், கூல்ட்ரிங்ஸ், ஜூஸ் என ஒரே மாதிரியாக குடிக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடிய இந்த கேரட் பாயாசத்தை நாம் செய்து குடிக்கலாம். இந்த சுவையான ரெசிபி வீட்டில் நடைபெறும் பல்வேறு விசேஷங்களுக்கு தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் A உள்ளதால் இது நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

- Advertisement -

இந்த சுவையான கேரட் பாயாசம் ரெசிபியை வீட்டில் முயற்சி செய்து உங்கள் அன்புக்குரியவர்களை மகிழ்விக்கவும். மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு இந்த கேரட் பாயாசம் செய்து கொடுத்தால், அவர்களின் பசி அடங்குவதோடு, உடலுக்கு சத்தானதும் கூட. இனி இந்த கேரட் பாயாசத்தை கடைகளில் சென்று வாங்கி சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை. இதை நீங்கள் வீட்டிலேயே சுலபமான முறையில் செய்து சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கும்.

Print
No ratings yet

கேரட் பாயாசம் | Carrot Payasam Recipe In Tamil

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த கேரட் பாயாசம் ரெசிபி உங்களுக்கு தான்! இந்த ரெசிபி தென் இந்திய மக்கள் தங்கள் பண்டிகைகளின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் இதை முக்கிய உணவாக செய்து மகிழ்வர். இது கீர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கேரட் பாயாசம் ரெசிபி அதிக பால் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த சுவையான கேரட் பாயாசம் நாக்கில் எச்சில் ஊறக்கூடிய அளவிற்கு மிக அருமையாக இருக்கும். இது அனைத்து பருவங்களுக்கும் மிகவும் பொருத்தமானது. இந்த ரெசிபி கொஞ்சம் இனிமையானதாக இருப்பினும், ஒரு சத்தான ரெசிபி ஆகும். பாயாசம் ரெசிபிகள் பல இந்தியர்களுக்கு பிடித்த சமையல் என்பதால், கேரட் பாயாசம் அனைவருக்கும் பிடித்த ரெசிபியாக உள்ளது.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: sweets
Cuisine: Indian
Keyword: Carrot Payasam
Yield: 3 People
Calories: 52kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் சேமியா
  • 1 கப் துருவிய கேரட்
  • 1 கப் சர்க்கரை
  • 6 கப் பால்
  • முந்திரி, திராட்சை தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 4 டேபிள் ஸ்பூன் நெய்

செய்முறை

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி, திராட்சையை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.‌
  • பின் அதே பாத்திரத்தில் சேமியா போட்டு வதக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் சிறிதளவு நெய் விட்டு கேரட்டை சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும். பின் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடங்கள் வரை வதக்கவும்.
  • பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து நாம் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • சேமியா முக்கால் பகுதி வெந்ததும், அதில் வதக்கிய கேரட், சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து வேக வைக்கவும்.
  • இவை நன்கு வெந்ததும் கடைசியாக ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான கேரட் பாயாசம் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 52kcal | Carbohydrates: 6g | Protein: 5g | Fat: 4.7g | Sodium: 64mg | Potassium: 628mg | Fiber: 2.5g | Sugar: 4.7g | Vitamin A: 69IU | Vitamin C: 6.22mg | Calcium: 33mg | Iron: 3mg

இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க கேரட் பட்டாணி சாதம் இப்படி செய்து பாருங்க! அருமையான டிபன் பாக்ஸ் ரெசிபி!