90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம எல்லாரும் சாப்பிட்டிருப்போம். ஆனா வீட்டிலேயே தேங்காய் மிட்டாய் ரொம்ப சுலபமா செய்யலாம் அதுலயும் இந்த தேங்காய் கூட நிறைய டிரை ஃப்ரூட்ஸ் சேர்த்து செஞ்சா அது ஒரு ஆரோக்கியமான ரெசிபியா மாறிடும்.
குழந்தைங்க ஸ்னாக்ஸ் கேட்டாங்க நான் எப்பவும் ஒரே மாதிரியா எண்ணெயில் வறுத்தது பொரிச்சதுன்னு செஞ்சு கொடுக்காம இந்த மாதிரி ஆரோக்கியமா தேங்காய் கூட டிரை ஃப்ரூட்ஸ் எல்லாம் சேர்த்து ஒரு சூப்பரான டிரை ஃப்ரூட்ஸ் உருண்டை செஞ்சு கொடுங்க.
சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியா இருக்கும் எத்தனை உருண்டை வாயில போகுது அப்படின்னு தெரியாது அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். இந்த சூப்பரான தேங்காய் உருண்டையா ஒரே ஒரு தடவை மட்டும் உங்க வீட்ல செஞ்சு ஸ்டோர் பண்ணி வச்சுக்கோங்க ஒரு வாரத்துக்கு பிரிட்ஜுக்குள்ள வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.
குழந்தைங்க கேட்கும் போதெல்லாம் ஒரு உருண்டை எடுத்துக் கொடுத்து அவர்களுக்கு சாப்பிட கொடுக்கலாம். நீங்க எவ்வளவு சத்தான நிறைய உருண்டைகள் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க அதே மாதிரி இந்த சூப்பரான தேங்காய் உருண்டையும் செஞ்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பாக இதோட டேஸ்ட் உங்களுக்கு ரொம்ப பிடிச்சு போய் அடிக்கடி செய்வீங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான தேங்காய் உருண்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்
தேங்காய் உருண்டை | Coconut Urundai Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் தேங்காய் துருவல்
- 10 முந்திரி
- 10 பாதாம்
- 2 ஏலக்காய்
- 5 பேரிச்சம்பழம்
- 10 காய்ந்த திராட்சை
- 5 வால்நட்ஸ்
- 1 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை
செய்முறை
- ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்
- பிறகு அதே மிக்ஸி ஜாரில் பாதாம் முந்திரி காய்ந்த திராட்சை வால்நட்ஸ் பேரிச்சம் பழம் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
- அதனையும் தேங்காயுடன் சேர்த்து எடுத்து வைத்துள்ள நாட்டு சர்க்கரையையும் சேர்த்து நன்றாக கலந்து உருண்டையாக பிடித்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான தேங்காய் உருண்டை தயார்.
இதனையும் படியுங்கள் : இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!