Home சைவம் வீடே மணமணக்க ருசியான கேரட் சாம்பார் இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! சுடு...

வீடே மணமணக்க ருசியான கேரட் சாம்பார் இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! சுடு சாதமுடன் போட்டு சாப்பிட அசத்தலாக இருக்கும்!

சாப்பாட்டில் நிறைய வகைகள் இருந்தாலும் கூட சிலருக்கு சைவ சாப்பாடு தான் மிகவும் அதிகமாக பிடிக்கும். அதிலும் குறிப்பாக சாம்பார் சாதம் என்றால் சொல்லவே வேண்டாம் விரும்பி சாப்பிடுவார்கள். நம் வீடுகளில் எப்படியும் வாரத்தில் ஒரு நாள் ஆவது சாம்பார் வைத்துவிடுவார்கள். குறிப்பாக செவ்வாய், வெள்ளி நாட்கள் என்றாலே சாம்பார் தான் மெனு.

-விளம்பரம்-

காய்கறி சாம்பார், கதம்ப சாம்பார், கிள்ளி போட்ட சாம்பார், அரைச்சுவிட்ட சாம்பார், இடிச்ச சாம்பார், டிபன் சாம்பாரென எக்கச்சக்கமான சாம்பார் வகைகள் தென்னிந்திய சமையலில் இடம் பிடித்துள்ளன. ஆண்கள் சிலருக்கு வீட்டில் செய்யும் அதை சாம்பார் என்றால் சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் அவர்களுக்கு வித்தியாசமாக செய்து கொடுத்தால் தோசைக்கும் இட்லிக்கும் சாம்பாரை ஊற்றி ஊற்றிக் குடிப்பார்கள்.

கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் மிகவும் சிறப்பான உணவுப் பொருள் தான் கேரட். இந்த கேரட்டை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் ஏ சத்தினால் பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுக்கலாம். அதற்கு அதனை பச்சையாகவோ அல்லது ஜூஸ் செய்தோ அல்லது சாம்பார் செய்தோ சாப்பிடலாம்.

Print
5 from 1 vote

கேரட் சாம்பார் | Carrot Sambar Recipe In Tamil

காய்கறி சாம்பார், கதம்ப சாம்பார், கிள்ளி போட்ட சாம்பார், அரைச்சுவிட்ட சாம்பார், இடிச்ச சாம்பார், டிபன் சாம்பாரென எக்கச்சக்கமான சாம்பார் வகைகள் தென்னிந்திய சமையலில் இடம் பிடித்துள்ளன. ஆண்கள் சிலருக்கு வீட்டில் செய்யும் அதை சாம்பார் என்றால் சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் அவர்களுக்கு வித்தியாசமாக செய்து கொடுத்தால் தோசைக்கும் இட்லிக்கும் சாம்பாரை ஊற்றி ஊற்றிக் குடிப்பார்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Kulambu
Cuisine: tamil nadu
Keyword: Carrot Sambar
Yield: 4
Calories: 328kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் துவரம் பருப்பு
  • 3 சிறிய கேரட்
  • 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் தூள்
  • 10 சின்ன வெங்காயம்
  • 100 மில்லி புளி கரைசல் தண்ணீர்
  • 1 தண்ணீர் கல் உப்பு
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • 1 தக்காளி

தாளிக்க

  • 1 டீஸ்பூன் கடுகு
  • 6 கருவேப்பிலை
  • 1 வர மிளகாய்
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • மல்லி இலை சிறிது

செய்முறை

  • முதலில் பருப்பை கழுவி அதில் 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி 6 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
  • பருப்பு வேகும் போது வெங்காயம், தக்காளி மற்றும் கேரட்டை வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • பின் வெந்த பருப்பில் வெட்டி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, கேரட் மற்றும் மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும்.
     
  • அதில் புளி கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் 3 விசில் விட்டு இறக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டவும். இறுதியில் மல்லி இலை தூவி பரிமாறவும்.
  • சுவையான,  ஆரோக்கியமான கேரட் சாம்பார் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 328kcal | Carbohydrates: 79g | Protein: 3g | Fat: 1.2g | Polyunsaturated Fat: 4g | Cholesterol: 2.3mg | Sodium: 6.9mg | Potassium: 1.7mg | Fiber: 51g | Vitamin A: 3IU | Vitamin C: 7.9mg | Calcium: 7mg | Iron: 2mg