சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான கேரட் தொக்கு இப்படி செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும் அவசியம் ட்ரை பண்ணி பாருங்க!
காய்கறிகளின் ராணி என்று அழைக்கப்படும் அளவிற்கு பெருமை கொண்டது கேரட். தொடர்ந்து கேரட் சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவாகும். சருமம் பொன்னிறமாகும். வேர்க் காய்கறிகளில் பிரபலமான ஒன்றாக கேரட் உள்ளது. இந்த அற்புத காய்கறியை பச்சையாகவும், சமைத்தும் பயன் பெறலாம். மேலும், இவற்றை நாம் அன்றாட
காய்கறிகளின் ராணி என்று அழைக்கப்படும் அளவிற்கு பெருமை கொண்டது கேரட். தொடர்ந்து கேரட் சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவாகும். சருமம் பொன்னிறமாகும். வேர்க் காய்கறிகளில் பிரபலமான ஒன்றாக கேரட் உள்ளது. இந்த அற்புத காய்கறியை பச்சையாகவும், சமைத்தும் பயன் பெறலாம். மேலும், இவற்றை நாம் அன்றாட எடுத்துக்கொள்வதால் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் இவற்றில் உள்ள பீட்டா – கரோட்டின் சத்து குறையாமல் முழுமையாக கிடைக்கிறது. இது கண்களில் ஈரப்பதத்தை காக்கப் பயன்படுகிறது. மேலும், வயதான காலத்தில் கண் பார்வைத்திறன் தெளிவாக இருக்கவும் உதவுகிறது.
நம்முடைய அன்றாட சமையல்களில் இவற்றை சேர்த்துக்கொண்டால் மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறையும் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். கேரட் வைத்து சுவையான மசாலா, கிரேவி, அல்வா, ஜுஸ் என்று பல விதங்களில் செய்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான சுவையில் கேரட் வைத்து தொக்கு ரெசிபியை காண உள்ளோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். இதனை எல்லா விதமான சாதத்திற்கும் வைத்து சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிட்டோம் என்றே தெரியாது. இதை பக்குவமாக செய்தால் 10 நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இந்த அற்புத காய்கறியில் எப்படி சுவையான மற்றும் ஆரோக்கியமான தொக்கு தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இந்த மழைக்கு இதமா சுட சுட கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!