இந்த மழைக்கு இதமா சுட சுட கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

வீட்ல மாலை நேரம் சிற்றுண்டி செய்வதற்கு எந்த பொருளுமே இல்லையா வெறும் கேரட்டும், உருளைக்கிழங்கு மட்டும்தான் வீட்ல இருக்கா? கவலைய விடுங்க ரொம்ப சுலபமான கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ் ஈஸியா பண்ணலாம். ஸ்னாக்ஸ் செய்றதுக்கு ரொம்பவே சூப்பரா இருக்கும். உருளைக்கிழங்கு கேரட்டையும் நீங்க ஸ்நாக்ஸ் செய்தீங்க அப்படின்னா அது ரொம்ப டேஸ்ட்டாவே இருக்கும். அப்படி இந்த ஒரு கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ் எப்படி ஈஸியா செய்வது பார்க்கலாம்.இந்த மாதிரி குட்டி குட்டி பால்ஸ் செஞ்சு கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்.

-விளம்பரம்-

அதுவும் இந்த மழை நேரத்துக்கு சும்மா சுட சுட கொடுக்கும்போது சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இந்த சுவையான கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ் ரொம்ப ஈஸியா பண்ணிடலாம். இதுக்கு செய்றதுக்கு தேவையான பொருளும் ரொம்பவே கம்மிதான். அதனால வீட்ல காய்கறி எதுவுமே இல்ல வெறும் கேரட்டும் உருளைக்கிழங்கு தான் இருக்கு என்ன பண்றது அப்படின்னு தெரியல டக்குனு இதை செய்து கொடுத்தீங்கன்னா எல்லாருமே ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.இந்த டேஸ்டான கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ்களை செய்து சாப்பிடும்போது ரொம்பவே பிடிக்கும்.

- Advertisement -

இது ஃபுல்லா வெஜிடபிள் பண்றதுனால ரொம்பவே ருசியாவும் இருக்கும் அதே போல் ஆரோக்கியமாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு காய்கறி சாப்பிட்டு வைக்கிறதே பிரச்சினையா இருக்குது அப்படின்னு சொன்னா இந்த மாதிரி கேரட் ஸ்டஃப் பண்ணும் போது இன்னும் கொஞ்சம் ஏதாவது காய்கறிகளையும் நீங்கள் சேர்த்து ஸ்டஃப் பண்ணி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சரி வாங்க இந்த சுவையான கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
4 from 1 vote

கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ் | Carrot stuffed potato balls in Tamil

இந்த டேஸ்டான கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ்களை செய்து சாப்பிடும்போது ரொம்பவே பிடிக்கும். இது ஃபுல்லா வெஜிடபிள் பண்றதுனால ரொம்பவே ருசியாவும் இருக்கும் அதே போல் ஆரோக்கியமாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு காய்கறி சாப்பிட்டு வைக்கிறதே பிரச்சினையா இருக்குது அப்படின்னு சொன்னா இந்த மாதிரி கேரட் ஸ்டஃப் பண்ணும் போது இன்னும் கொஞ்சம் ஏதாவது காய்கறிகளையும் நீங்கள் சேர்த்து ஸ்டஃப் பண்ணி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சரி வாங்க இந்த சுவையான கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
Prep Time15 minutes
Active Time20 minutes
Total Time35 minutes
Course: Fry, snacks
Cuisine: tamil nadu
Keyword: Baby Potato Fry, potato snacks, snacks
Yield: 4 People
Calories: 270kcal
Cost: 30

Equipment

  • 1 குக்கர்
  • 2 கரண்டி
  • 1 வாணலி
  • 1 கேரட் துருவி

தேவையான பொருட்கள்

  • 1 கேரட்
  • 2 உருளைக்கிழங்கு
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 14 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 2 ஸ்பூன் சோள மாவு
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

  • முதலில் கேரட்டை தோலை சீவி கேரட் துருவுவதில் வைத்து பொடியாக துருவி எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்குகளை குக்கரில் வேகவைத்து எடுக்க வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு வானொலியை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் துருவிய கேரட்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பிறகு அதில் உப்பு கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பிறகு அதில் மிளகாய் தூளை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி வைக்கவும்.
  • வேக வைத்துள்ள உருளைக்கிழங்குகளை தோலை உரித்து விட்டு நன்றாக கையால் மசித்து விடவும்.
  • மசித்து வைத்த உருளைக்கிழங்கில் சோளமாவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • பிறகு பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மாவில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு உருட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு உருண்டைகளை சின்ன சின்ன வட்ட வடிவ தட்டைகளாக தட்டிக்கொண்டு அதில் கேரட் துருவல் மசாலாவை வைத்து மீண்டும் உருண்டைகளாக உருட்டி விடவும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து இந்த உருண்டைகளை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் அதில் உருட்டி வைத்துள்ள கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு உருண்டைகளை சேர்த்து நன்றாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • பொரித்து எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு உருண்டைகளின் மேல் சிறிதளவு மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • தக்காளி சாஸ் உடன் இந்த உருளைக்கிழங்கு உருண்டைகளை பரிமாறினால் சுவையான கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ் தயார்.

Nutrition

Calories: 270kcal | Carbohydrates: 150g | Protein: 30g | Fat: 50g | Saturated Fat: 30g | Cholesterol: 10mg

இதையும் படியுங்கள் : அட்டகாசமான நெல்லை ஸ்பெஷல் உருளைப் பொரியல் ரெசிபி உங்களுக்காக இதோ!