Home சைவம் அட்டகாசமான நெல்லை ஸ்பெஷல் உருளைப் பொரியல் ரெசிபி உங்களுக்காக இதோ!

அட்டகாசமான நெல்லை ஸ்பெஷல் உருளைப் பொரியல் ரெசிபி உங்களுக்காக இதோ!

காரசாரமான உருளைப் பொரியல்ன்னா அது இப்படித்தான் இருக்கும். இதை பிடிக்காதுன்னு யாரும் சொல்லவே மாட்டாங்க. உருளைக்கிழங்கை பிடிக்காத குழந்தைளே இருக்க முடியாது. உருளைக்கிழங்கை எப்படி செய்து கொடுத்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும். உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

-விளம்பரம்-

 உருளைக்கிழங்கு பொரியல் என்று சொன்னாலே இதை விரும்பி எல்லோரும் சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் உருளைக்கிழங்கு முக்கியமானது என்றே சொல்லலாம். . அதிலும் நெல்லை ஸ்டைலில் உருளைக்கிழங்கு பொரியல் செய்து கொடுத்தால் சொல்லவே வேண்டாம்.

நெல்லை உருளைப் பொரியல் குறிப்பாக ரசம் சாதம், சாம்பார் சாதத்திற்கு இதை சொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும். தேவைப்பட்டால் சப்பாத்திக்கு கூட இதை சைட் டிஷ் ஆக பரிமாறலாம். எல்லா வெரைட்டி ரைஸ்க்கும் சைடிஷ் ஆக வைக்கலாம். ஒரு ஸ்பெஷல் மசாலா சேர்த்து போட்டு, இந்த உருளைக்கிழங்கு பொரியல் இன்னைக்கு நாம் தயார் செய்யப் போகின்றோம்.  சுவைத்து விட்டால் வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் இந்த ரெசிபி உங்க வீட்டில் இருக்கும்.

Print
4.25 from 4 votes

உருளைப் பொரியல் | Potato Poriyal Recipe In Tamil

நெல்லை உருளைப்பொரியல் குறிப்பாக ரசம் சாதம், சாம்பார் சாதத்திற்கு இதை சொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.தேவைப்பட்டால் சப்பாத்திக்கு கூட இதை சைட் டிஷ் ஆக பரிமாறலாம். எல்லா வெரைட்டி ரைஸ்க்கும்சைடிஷ் ஆக வைக்கலாம். ஒரு ஸ்பெஷல் மசாலா சேர்த்து போட்டு, இந்த உருளைக்கிழங்கு பொரியல்இன்னைக்கு நாம் தயார் செய்யப் போகின்றோம். சுவைத்து விட்டால் வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் இந்த ரெசிபி உங்க வீட்டில் இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Fry, LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Potato Poriyal
Yield: 4
Calories: 230kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 பெரிய வெங்காயம்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • உப்பு தேவைக்கு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கடுகு
  • உளுந்து

அரைக்க

  • 2 தேங்காய்த் துருவல்
  • 1 சீரகம்
  • 5 சின்ன வெங்காயம்

செய்முறை

  • உருளைக்கிழங்கை தோல் நீக்கி விரல் நீளத் துண்டுகளாகவும், வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்குங்கள்.
  • அரைக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களைச் சிறிதளவு தண்ணீர் விட்டு சற்று கரகரப்பாக அரைத்து வையுங்கள்.
  • எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள்.
  • வதங்கியதும் கிழங்கு, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்துக் கிளறி, அரை கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வேகவையுங்கள்.
  • கிழங்கு முக்கால் பதம் வெந்ததும், அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, கிழங்கு வெந்து சுருளும் வரை கிளறி, கறிவேப்பிலைத் தூவி இறக்குங்கள்.
  • சுவையான நெல்லை உருளைப் பொரியல் தயார்

Nutrition

Serving: 300g | Calories: 230kcal | Carbohydrates: 8g | Protein: 46g | Fat: 12g | Saturated Fat: 4.3g | Cholesterol: 67mg | Sodium: 37mg | Potassium: 150mg