- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
காய்கறிகளின் ராணி என்று அழைக்கப்படும் அளவிற்கு பெருமை கொண்டது கேரட். தொடர்ந்து கேரட் சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவாகும். சருமம் பொன்னிறமாகும். வேர்க் காய்கறிகளில் பிரபலமான ஒன்றாக கேரட் உள்ளது. இந்த அற்புத காய்கறியை பச்சையாகவும், சமைத்தும் பயன் பெறலாம். மேலும், இவற்றை நாம் அன்றாட எடுத்துக்கொள்வதால் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் இவற்றில் உள்ள பீட்டா – கரோட்டின் சத்து குறையாமல் முழுமையாக கிடைக்கிறது. இது கண்களில் ஈரப்பதத்தை காக்கப் பயன்படுகிறது. மேலும், வயதான காலத்தில் கண் பார்வைத்திறன் தெளிவாக இருக்கவும் உதவுகிறது.
நம்முடைய அன்றாட சமையல்களில் இவற்றை சேர்த்துக்கொண்டால் மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறையும் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். கேரட் வைத்து சுவையான மசாலா, கிரேவி, அல்வா, ஜுஸ் என்று பல விதங்களில் செய்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான சுவையில் கேரட் வைத்து தொக்கு ரெசிபியை காண உள்ளோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். இதனை எல்லா விதமான சாதத்திற்கும் வைத்து சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிட்டோம் என்றே தெரியாது. இதை பக்குவமாக செய்தால் 10 நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இந்த அற்புத காய்கறியில் எப்படி சுவையான மற்றும் ஆரோக்கியமான தொக்கு தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இந்த மழைக்கு இதமா சுட சுட கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
முதலில் கேரட்டை நன்கு கழுவி துருவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி மற்றும் சோம்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும், நறுக்கிய சின்ன வெங்காயம் கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி சாம்பார் பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் நாம் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் துருவிய கேரட் சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
அதன்பிறகு எண்ணெய் பிரிந்து வந்ததும் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கேரட் தொக்கு தயார்.






