Advertisement
ஸ்நாக்ஸ்

மொறு மொறுனு ருசியான கேரட் மசால் வடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! பக்காவான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி!

Advertisement

வீட்டிற்கு யாராவது திடீரென விருந்தாளி வந்து விட்டாலோ அல்லது நமக்கே கூட ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும், டிபனுக்கு சைடிஷ் ஆக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும் முதலில் ஞாபகத்துக்கு வருவது வடை தான். ஆனால் இதற்கு பருப்பு ஊற வைத்து அரைத்து என வேலை கொஞ்சம் அதிகமாக நீளும் என்பதால் பெரும்பாலும் இதை செய்ய சோம்பல் பட்டு விடுகிறோம். இனி அதற்கு அவசியமே இல்லை வடை சாப்பிட வேண்டும் என்று நினைத்த பத்தாவது நிமிடத்தில் சுடச்சுட கேரட் வடை ரெடி பண்ணிடலாம். வேர் காய்கறிகளில் பிரபலமான ஒன்றாக கேரட் உள்ளது. இந்த அற்புத காய்கறியை பச்சையாகவும், சமைத்தும் பயன் பெறலாம். மேலும், இவற்றை நாம் அன்றாட எடுத்துக்கொள்வதால் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். இது கண்களில் ஈரப்பதத்தை காக்கப் பயன்படுகிறது. மேலும், வயதான காலத்தில் கண் பார்வைத்திறன் தெளிவாக இருக்கவும் உதவுகிறது.

நம்முடைய அன்றாட சமையல்களில் இவற்றை சேர்த்துக்கொண்டால் மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறையும் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இந்த அற்புத காயில் எப்படி சுவையான மற்றும் ஆரோக்கியமான வடை தயார் செய்யலாம் என்று பார்க்கலாம். இந்த வடை மிகவும் ருசியாக, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட. இந்த வடையை எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்ததும் சுடச்சுட சட்னியுடன் தொட்டு சாப்பிடும் போது அதன் சுவையே அலாதி தான்.

Advertisement

கேரட் வடை | Carrot Vadai Recipe In Tamil

Print Recipe
வீட்டிற்கு யாராவது திடீரென விருந்தாளி வந்து விட்டாலோ அல்லது நமக்கே கூட ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும், டிபனுக்கு சைடிஷ் ஆக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும் முதலில் ஞாபகத்துக்கு வருவது வடை தான். ஆனால் இதற்கு பருப்பு ஊற வைத்து அரைத்து என வேலை கொஞ்சம் அதிகமாக நீளும் என்பதால் பெரும்பாலும் இதை செய்ய சோம்பல்
Advertisement
பட்டு விடுகிறோம். இனி அதற்கு அவசியமே இல்லை வடை சாப்பிட வேண்டும் என்று நினைத்த பத்தாவது நிமிடத்தில் சுடச்சுட கேரட் வடை ரெடி பண்ணிடலாம். வேர் காய்கறிகளில் பிரபலமான ஒன்றாக கேரட் உள்ளது. இந்த அற்புத காய்கறியை பச்சையாகவும், சமைத்தும் பயன் பெறலாம். எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இந்த அற்புத காயில் எப்படி சுவையான மற்றும் ஆரோக்கியமான வடை தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
Course evening, snacks
Cuisine Indian
Keyword Carrot Vadai
Prep Time
Advertisement
10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 25

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி
  • 1 மிக்ஸி

Ingredients

  • 5 கேரட்
  • 3/4 கப் பொட்டுக்கடலை
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் கேரட்டை தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பவுளில் துருவிய கேரட், வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை, மிளகாய் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பின் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்துக் கொள்ளவும்.
  • பின் இந்த கேரட் கலவையுடன் பொடித்து வைத்திருந்த பொட்டு கடலை மாவையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை கொஞ்சமாக எடுத்து வடை போல் தட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கேரட் வடை தயார். இந்த வடையை அப்படியே சாப்பிடலாம் அல்லது சட்னி வைத்தும் சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 350g | Calories: 25kcal | Carbohydrates: 6g | Protein: 5.5g | Fat: 2.47g | Sodium: 69mg | Potassium: 328mg | Fiber: 1.5g | Vitamin A: 75IU | Vitamin C: 6.22mg | Calcium: 69mg | Iron: 8.3mg

இதனையும் படியுங்கள் : ருசியான கேரட் பருப்பு சாதம் வீடே மணக்க மணக்க இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! சூப்பரான டிபன் பாக்ஸ் ரெசிபி!

Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

1 மணி நேரம் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

12 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

14 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

22 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago