வீடே மணக்க மணக்க கடலைப்பருப்பு குழம்பு இப்படி வைத்து பாருங்கள், சாப்பிட அருமையாக இருக்கும்!

paruppu kulambu
- Advertisement -

சாம்பார், குழம்பு என்றாலே துவரம் பருப்பு வைத்து செய்ய வேண்டும் என்றில்லை. இந்த மாதிரி கடலைப்பருப்பு வைத்தும் செய்யலாம்.  கடலைப்பருப்பு குழம்பு ,காய்கறி எதுவும் சேர்க்காமல் செய்யலாம்.  சுவையாக இருக்கும். இது சூடான சாதத்திற்கு மட்டும் இல்லாமல். இட்லி தோசைக்கும் அருமையான பக்க உணவாக இருக்கும்.

-விளம்பரம்-

அனைவரது வீட்டிலும் அதிகமாக துவரம்புப்பு வைத்து குழம்பு வைப்பர். அவ்வாறு கடலைப்பருப்பு சேர்த்து செய்யும் அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும். கடலைப்பருப்பு வடை, போண்டா இப்படி பல உணவுகள் செய்தாலும் ஒரு முறை இப்படி குழம்புசெய்து பாருங்கள். இதன் தனிப்பட்ட சுவை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதனை சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான கடலைப்பருப்பு குழம்பு எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -
Print
No ratings yet

கடலைப்பருப்பு குழம்பு | Channa dal Kulambu Recipe In Tamil

அனைவரது வீட்டிலும் அதிகமாக துவரம் பருப்பு வைத்து குழம்பு வைப்பர். அவ்வாறு கடலைப்பருப்பு சேர்த்து செய்யும்அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும். கடலைப்பருப்பு வடை, போண்டா இப்படி பலஉணவுகள் செய்தாலும் ஒரு முறை இப்படி குழம்புசெய்து பாருங்கள். இதன் தனிப்பட்ட சுவைஅனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதனை சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட அவ்வளவுஅருமையாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான கடலைப்பருப்பு குழம்பு எவ்வாறு செய்ய வேண்டும்என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Kulambu
Cuisine: tamil nadu
Keyword: Channa dal Kulambu
Calories: 69kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் கடலைப்பருப்பு
  • 1 தக்காளி
  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 3 பல் பூண்டு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 2 டீஸ்பூன் தேங்காய் துண்டுகள்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் தனியா
  • 3 காய்ந்த மிளகாய்
  • 1 1/2 டீஸ்பூன் குழம்பு பொடி
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • பெருங்காயம் சிறிதளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  •  
    தேங்காய், சீரகம், தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து ஒன்றிரண்டாக பொடிக்கவும். காய்கறிகளை பொடியாக நறுக்கவும்.
  • குக்கரில் கடலைப்பருப்பு, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு கொதி வந்ததும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • இதனுடன் ஒன்றிரண்டாக அரைத்த பொடி, குழம்பு பொடி, உப்பு, பெருங்காயம் போட்டு நறுக்கிய வாழைக்காயைப் போட்டு வதக்கி, வேக வைத்த பருப்பில் கொட்டி, சிறிது தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.

Nutrition

Serving: 500g | Calories: 69kcal | Carbohydrates: 36g | Protein: 9.87g | Saturated Fat: 1.4g | Cholesterol: 26.7mg | Sodium: 38mg | Potassium: 387mg