சென்னை வடகறி, ருசியா, சுலபமாக செய்ய முடியுமா, என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இந்த செய்முறை இருக்கும் செய்து பாருங்க!

தமிழ்நாட்டில் உணவுகளை பொறுத்தவரை ஒவ்வொரு பகுதிகளுக்கும், ஒவ்வொரு ஊர்களுக்கும் தனித்துவமான உணவு வகைகளும், சமையல் முறைகளும் இருந்து வருகின்றன. ஒரே உணவை வெவ்வேறு வகைகளில் தயார் செய்து சாப்பிடும் பழக்கமும் இருந்து வருகிறது. அந்த வகையில் பன்முக கலாச்சாரத்தை கொண்ட தமிழ்நாட்டின் தலை

By Prem Kumar · 15/4/2024

தமிழ்நாட்டில் உணவுகளை பொறுத்தவரை ஒவ்வொரு பகுதிகளுக்கும், ஒவ்வொரு ஊர்களுக்கும் தனித்துவமான உணவு வகைகளும், சமையல் முறைகளும் இருந்து வருகின்றன. ஒரே உணவை வெவ்வேறு வகைகளில் தயார் செய்து சாப்பிடும் பழக்கமும் இருந்து வருகிறது. அந்த வகையில் பன்முக கலாச்சாரத்தை கொண்ட தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மாநிலத்தின் பிற பகுதிகள், நாட்டின் பிற இடங்களை சேர்ந்த உணவு, கலாச்சாரம், பழக்கவழக்கம் என அனைத்தும் இருந்து வருகிறது. உணவை பொறுத்தமட்டில் சென்னைக்கு என தனித்துவமான உணவாக இருந்து வருவது வடகறி. பெரும்பாலான நபர்களுக்கு வடகறி என்றால் தெரியாது.

ஆனால் சென்னையில் பெரும்பாலான கடை மெனுவில் வடகறி கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். சென்னையில் பிரபலமான உணவு என்றாலே வடகறி என கூறும் அளவுக்கு பிரமான ரெசிபியாக இருந்து வரும் சென்னை வடகறியை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். இட்லி, தோசை, பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம் என எல்லாவிதமான டிபன் வகைகளோடும் சேர்த்து உண்ணப்படும் இந்த உணவு வகை, சென்னை சைதாப்பேட்டையில் அதிகளவில் கிடைக்கும்.

இது, கடலைப்பருப்பு வடை அல்லது பகோடாவை, வெங்காயம், தக்காளி மற்றும் மசாலா கலவையோடுச் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. சட்னி, குருமா, சாம்பார் என ஒரே வகையான சைடு டிஷ் சாப்பிட்டுச் சலித்துப்போனவர்கள் சென்னை வடகறியை ட்ரை செய்யலாமே!

இதனையும் படியுங்கள் : ருசியான மாங்காய் தால் சென்று சாப்பிட்டால் அவ்வளவு ருசியா இருக்கும்

Recipes AMP · Quick view
View full