- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast, LUNCH
மாங்காய் அப்படின்னு சொன்னாலே சில பேருக்கு எச்சில் ஊறும் அந்த அளவுக்கு மாங்காயோட டேஸ்ட் செம்மையா இருக்கும். என்னதான் மாங்காய் சம்மர்ல ரொம்பவே ஃபேமஸா இருந்தாலும் எப்ப குடுத்தாலும் இந்த மாங்காய் எல்லாரும் சாப்பிடுவாங்க. எப்பவுமே மாங்காய் கிடைக்காதா அப்படின்னு என்கிறவங்களும் நிறைய பேர் இருக்காங்க. மாங்காய் வச்சு நம்ம பல உணவுகள் செய்யலாம்.
என்னதான் பல உணவுகள் செஞ்சாலும் வெறும் மாங்காய்யில கொஞ்சம் உப்பும் மிளகாய் தூளும் சேர்த்து வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ஒரு ருசியா இருக்கும். அதை வேற எதாலையுமே அடிச்சிக்க முடியாது. நம்ம மாங்காய் அப்படியே சாப்பிட்டா பல்லு கூசும் அப்படி நினைக்கிறவங்க மாங்காய் இல்ல எக்கச்சக்கமான உணவுகள் செஞ்சு சாப்பிடுவாங்க.
மாங்காய் பச்சடி மாங்காய் ஊறுகாய் மாங்காய் சாம்பார், மீன் குழம்புல மாங்காய் புளிக்குழம்புல மாங்காய் னு எந்த உணவுல மாங்காய் சேர்த்து செஞ்சாலும் சுவை ரொம்பவே அருமையா இருக்கும் அதோட மணமும் ரொம்ப சூப்பரா இருக்கும். அந்த வகையில் இன்னைக்கு நாம மாங்காய் தாள் எப்படி செய்வது என்று பார்க்க போறோம்.
காரக்குழம்பு புளி குழம்பு எல்லாத்துக்கும் இந்த மாங்காய் தால் சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். இல்லனா வெறும் சாதத்துக்கு இந்த மாங்காய் டால் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம் இதுக்கும் டேஸ்ட் அருமையாவே இருக்கும். சப்பாத்தி நான் போன்றவைகளுக்கும் சைடு டிஷ் ஆக சேர்த்து வைத்து சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான மாங்காய் தால் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : இந்த மாம்பழ சீசன்ல வீட்டிலயே சூப்பரான ஃப்ரூட்டி செஞ்சு குடிச்சு பாருங்க! ஒவ்வொரு துளியும் அருமையாக இருக்கும்!
Ingredients
Method
முதலில் மாங்காயை கழுவி சுத்தம் செய்த துருவி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரில் பாசிப்பருப்பு மற்றும் துவரம் பருப்பு சேர்த்து அதனுடன் பெருங்காயத்தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து மூன்று விசில் விட்டு எடுத்து ஆறியவுடன் மசித்து கொள்ளவும்.
ஒரு கடல் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து பச்சை மிளகாய் மற்றும் மாங்காய் திருமலை சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
மாங்காய் நன்றாக வெந்தவுடன் மசித்து வைத்துள்ள பருப்பு கடைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
இறுதியாக சிறிதளவு நெய் மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான மாங்காய் தால் தயார்.






