Advertisement
அசைவம்

அடுத்தமுறை நண்டு வாங்கி செட்டிநாடு ஸ்டைல் தண்ணீர் நண்டு குழம்பு இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

செட்டிநாடு ஸ்டைலில் ஈஸியான நண்டு தண்ணீர் குழம்பு இப்படி செஞ்சு பாருங்க.
கடல்வாழ் உயிரினங்களில் எவ்வளவு மீன்களை நாம் உணவாக சாப்பிட்டு இருந்நால் நண்டின் ருசசி ரொம்பவும் வித்தியாசமானது. சிறிய மற்றும் பெரிய பெரிய அளவுகளில் கூட கிடைக்கும் இந்த நண்டு என்றால் சிலருக்கு அலாதியான ஒரு விருப்பம் உண்டு குறிப்பாக கடன் உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு அவர்கள் கடல் உணவு பட்டியலில் முதல் இடத்தில் தான் இருக்கும்.

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான கேரளா மத்தி மீன் வறுவல் இப்படி செய்து பாருங்கள்!

Advertisement

அந்த நண்டு நம் ஊர் ஸ் டலில் குழம்பாகவும், கிரேவியாகவும் எப்படி செய்தாலு நம ஆட்கள் ஒரு பிடி பிடித்து விடுவார்கள் அந்த நண்டை அப்படியே செட்டிநாடு ஸ்டைலில் செய்து கொடுத்தால் சொல்லவ வேண்டும். இந்த செட்டிநாடு ஸ்டைலில் ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம்

இப்படி ஓரூ முறை வீடே கமகமக்கு சுவையில் செட்டிநாடு ஸடைல் தண்ணீர் நண்டு குழம்பு உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் யாரும வேண்டாம்னே சொல்லமாட்டாங்க, கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள், நீங்களும் மிஸ் பன்னமா உங்கள் வீட்டிலும் செய்து பாருங்க அதற்கு நேவையான செய்முறை குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

செட்டிநாடு தண்ணீர் குழம்பு | Chettinad Nandu Kulambu Recipe in Tamil

Print Recipe
கடல்வாழ் உயிரினங்களில் நண்டு ரொம்பவும் வித்தியாசமானது. சிறிய மற்றும் பெரிய பெரிய அளவுகளில் கூட கிடைக்கும் இந்த நண்டு என்றால் சிலருக்கு அலாதியான ஒரு விருப்பம் உண்டு. நண்டு பிரியர்களுக்கு செட்டிநாடு ஸ்டைலில் ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த
Advertisement
செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு சுவையாக எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
Course dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Nandu, நண்டு
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 385

Equipment

  • 2 கடாய்
  • 1 அகல பாத்திரம்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1/2 KG நண்டு
  • 20 சின்ன வெங்காயம் நறுக்கியது
  • 2 தக்காளி நறுக்கியது நறுக்கியது
  • 8 பல் பூண்டு
  • 1 கத்தரிக்காய் நறுக்கியது
  • 1/2 கப் தேங்காய் துருவியது
  • 1 Tbsp மிளகாய் தூள்
  • 1/2 Tsp மஞ்சள் தூள்  
  • 1/2 Tbsp கரம் மசாலா
  • 2 பட்டை
  • 1 Tsp சீரகம்
  • 1 Tsp சோம்பு
  • 1/2 Tsp வெந்தயம்
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 கைப்பிடி கொத்த மல்லி
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் நண்டை கழுவி சுத்தம் செய்து, பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் நண்டு மற்றும் உப்பு சேர்த்து பத்து நிமிடம் வேகவைத்துக் கொள்ளவும்.
  • பின் சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கி. பூண்டை தோல் உரித்து தட்டி வைத்துக் கொள்ளவும். பின் தேங்காய் துருவலுடன் தண்ணீர் சேர்த்து அரைத்துக் வைத்து கொள்ளவும்.
  • பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கத்தாிக்காய், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கி பின் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • பிறகு அதனுடன் மிளகாய் தூள், தேங்காய் விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பின் காய்கறிகள் வெந்ததும் நண்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
  • பிறகு வேறு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் சோம்பு, பட்டை, சீரகம், வெந்தயம், பூண்டு போட்டு சிவக்க வதக்கி குழம்பில் சேர்க்கவும்.
  • பின்பு நறுக்கிய கொத்தமல்லித் தழையை தூவி இறக்கி விடவும் அவ்வளவுதான் சூட சூட செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு தயாராகிவிட்டது.

Notes

 

Nutrition

Serving: 1100Gram | Calories: 385kcal | Carbohydrates: 8g | Protein: 9g | Fat: 1g | Cholesterol: 2mg | Potassium: 738mg | Sugar: 0.1g | Calcium: 2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 03 மே 2024!

மேஷம் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பும் உண்டாகும். வாழ்க்கைத்துணை மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதலில் இனிமை இருக்கும். உணவு…

3 மணி நேரங்கள் ago

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

12 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

13 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

15 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

20 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

23 மணி நேரங்கள் ago