- Advertisement -
இந்த மத்தி மீன் வறுவல் அணைத்து குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அட்டகாசமான சுவையில் இருக்கும்.இந்த வார கடைசில் இந்த மீனை வாங்கி இது போன்று செய்து வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான விரால் மீன் குழம்பு செய்வது எப்படி ?
- Advertisement -
அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்தமுறையும் இது போல் உங்களை செய்து தர சொல்லி கேட்பார்கள். அதனால் இன்று இந்த கேரளா மத்தி மீன் வறுவல் செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
மாத்தி மீன் வறுவல் | Mathi Fish Fry Recipe In Tamil
இந்த மத்தி மீன் வறுவல் அணைத்து குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அட்டகாசமான சுவையில் இருக்கும்.இந்த வார கடைசில் இந்த மீனை வாங்கி இது போன்று செய்து வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்தமுறையும் இது போல் உங்களை செய்து தர சொல்லி கேட்பார்கள்.
Yield: 4 people
Calories: 240kcal
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கிலோ மத்தி மீன்
- 2 தேக்கரண்டி மிளகு
- 2 தேக்கரண்டி சீரகம்
- 1 தேக்கரண்டி சோம்பு
- 1 இஞ்ச் நீளம் இஞ்சி
- 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
- 1 தேக்கரண்டி தயிர்
- உப்பு தேவையான அளவு
- 200 மில்லி எண்ணெய்
செய்முறை
- முதலில் மீனை நன்கு சுத்தம் செய்யவும்.
- பிறகு மிளகு, சீரகம், சோம்பு, இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த இஞ்சி பூண்டு விழுது, அரைத்த மிளகு, சீரகம், பொடி, எலுமிசை சாறு, தயிர், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து அதனை கழுவிய மீனில் நன்கு தடவி வைக்கவும், தேவையானால் மஞ்சள் பொடி சேர்க்கலாம், இதனை ப்ரிட்ச்சில் குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும்.
- அதன் பிறகு அடுப்பில் கடாயை வைத்து, அதில் பாதி எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் ஊற வைத்த மீனை மெதுவாக அடுக்கி வைத்து அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும்.
- அதனை கொஞ்சம் நேரம் கழித்து, மீன் உடைந்து விடாமல் மெதுவாக புரட்டிவிடவும். எண்ணெய் போதவில்லை என்றால் சிறிது ஊற்றிக்கொள்ளவும். அடுத்த பக்கமும் வெந்ததும், மீனை உடையாமல் புரட்டவும்.
- இரு பக்கமும் மீன் மொறு மொறுனு வெந்ததும், எடுத்து தட்டில் வைத்து கருவேப்பிலை தூவி சூடாக பரிமாறவும். இந்த வறுத்த மத்தி மீனை எந்த குழம்பு சாதத்துக்கு சேர்த்து சாப்பிடலாம்.
Nutrition
Calories: 240kcal | Carbohydrates: 11g | Protein: 29g | Fat: 9g | Cholesterol: 100mg | Sodium: 380mg