- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- dinner, LUNCH
செட்டிநாடு ஸ்டைலில் ஈஸியான நண்டு தண்ணீர் குழம்பு இப்படி செஞ்சு பாருங்க.
கடல்வாழ் உயிரினங்களில் எவ்வளவு மீன்களை நாம் உணவாக சாப்பிட்டு இருந்நால் நண்டின் ருசசி ரொம்பவும் வித்தியாசமானது. சிறிய மற்றும் பெரிய பெரிய அளவுகளில் கூட கிடைக்கும் இந்த நண்டு என்றால் சிலருக்கு அலாதியான ஒரு விருப்பம் உண்டு குறிப்பாக கடன் உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு அவர்கள் கடல் உணவு பட்டியலில் முதல் இடத்தில் தான் இருக்கும்.
இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான கேரளா மத்தி மீன் வறுவல் இப்படி செய்து பாருங்கள்!
அந்த நண்டு நம் ஊர் ஸ் டலில் குழம்பாகவும், கிரேவியாகவும் எப்படி செய்தாலு நம ஆட்கள் ஒரு பிடி பிடித்து விடுவார்கள் அந்த நண்டை அப்படியே செட்டிநாடு ஸ்டைலில் செய்து கொடுத்தால் சொல்லவ வேண்டும். இந்த செட்டிநாடு ஸ்டைலில் ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம்
இப்படி ஓரூ முறை வீடே கமகமக்கு சுவையில் செட்டிநாடு ஸடைல் தண்ணீர் நண்டு குழம்பு உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் யாரும வேண்டாம்னே சொல்லமாட்டாங்க, கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள், நீங்களும் மிஸ் பன்னமா உங்கள் வீட்டிலும் செய்து பாருங்க அதற்கு நேவையான செய்முறை குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Ingredients
Method
முதலில் நண்டை கழுவி சுத்தம் செய்து, பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் நண்டு மற்றும் உப்பு சேர்த்து பத்து நிமிடம் வேகவைத்துக் கொள்ளவும்.
பின் சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கி. பூண்டை தோல் உரித்து தட்டி வைத்துக் கொள்ளவும். பின் தேங்காய் துருவலுடன் தண்ணீர் சேர்த்து அரைத்துக் வைத்து கொள்ளவும்.
பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கத்தாிக்காய், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கி பின் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பிறகு அதனுடன் மிளகாய் தூள், தேங்காய் விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பின் காய்கறிகள் வெந்ததும் நண்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
பிறகு வேறு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் சோம்பு, பட்டை, சீரகம், வெந்தயம், பூண்டு போட்டு சிவக்க வதக்கி குழம்பில் சேர்க்கவும்.
பின்பு நறுக்கிய கொத்தமல்லித் தழையை தூவி இறக்கி விடவும் அவ்வளவுதான் சூட சூட செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு தயாராகிவிட்டது.






