Advertisement
சட்னி

தோசை, இட்லிக்கு இப்படி செட்டிநாடு ஸ்டைல் தக்காளி சட்னி செய்து பாருங்கள் இரண்டு அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

Advertisement

குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சமைக்கும் உணவு தான் சட்னி. இதை பெரும்பாலும் நாம் இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம். அப்படி எளிமையாக தயார் செய்யப்படும் செட்டிநாடு தக்காளி சட்னி எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம். தினமும் நாம் காலை உணவாக சாப்பிடும் இட்லி, தோசை போன்றவற்றிற்கு தேங்காய் சட்னி, கார சட்னி, சாம்பார் என்று செய்ததே செய்து அலுத்து விட்டதா? இதனை தவிர வேறு ஏதாவது சட்னியை செய்து தருமாறு வீட்டில் உள்ளவர்கள் கேட்டால் இந்த செட்டிநாடு தக்காளி சட்னியை செய்து கொடுங்கள். பின் இதனையே அடிக்கடி செய்து தருமாறு வீட்டில் இருப்பவர்கள் சொல்லும் அளவிற்கு அதன் சுவை அபாரமாக இருக்கும். தென்னிந்திய உணவு வகைகளில் செட்டிநாடு உணவு வகை மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இவற்றின் சுவையும், ருசியும் தனித்துமானதாக உள்ளது.

இந்த அற்புதமான செட்டிநாடு உணவு வகைகளில் காலை வேளையில் செய்யப்படும் உணவுகள் அல்டிமேட் சுவையில் இருக்கும். அதிலும் இட்லி, தோசைகளுக்கு பரிமாறப்படும் சட்னிகளின் ருசியே தனி தான். இந்த டேஸ்ட்க்காகவே கணக்கில்லாமல் இட்லி, தோசைகளை உள்ளே தள்ளலாம். அப்படிப்பட்ட காரசாரமான செட்டிநாடு தக்காளி சட்னி செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம். விதவிதமான சட்னி வகைகள் இருக்கும் போதும் தக்காளி சட்னிக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது என கூறலாம். முறுகலான தோசை உடன் கொஞ்சம் தக்காளி சட்னி வைத்து கொடுத்தால் அவ்வளவு அருமையாக இருக்கும். செட்டிநாடு பகுதிகளில் கிடைக்கக் கூடிய இந்த தக்காளி சட்னி எளிமையாக நாமும் நம் வீட்டிலேயே செய்து காட்டலாம்.

Advertisement

செட்டிநாடு தக்காளி சட்னி | Chettinad Tomato Chutney Recipe In Tamil‌

Print Recipe
குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சமைக்கும் உணவு தான் சட்னி. இதை பெரும்பாலும் நாம் இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம். அப்படி எளிமையாக தயார் செய்யப்படும் செட்டிநாடு தக்காளி சட்னி எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம். தினமும் நாம்
Advertisement
காலை உணவாக சாப்பிடும் இட்லி, தோசை போன்றவற்றிற்கு தேங்காய் சட்னி, கார சட்னி, சாம்பார் என்று செய்ததே செய்து அலுத்து விட்டதா? இதனை தவிர வேறு ஏதாவது சட்னியை செய்து தருமாறு வீட்டில் உள்ளவர்கள் கேட்டால் இந்த செட்டிநாடு தக்காளி சட்னியை செய்து கொடுங்கள். பின் இதனையே அடிக்கடி செய்து தருமாறு வீட்டில் இருப்பவர்கள் சொல்லும் அளவிற்கு அதன் சுவை அபாரமாக இருக்கும்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Chettinad Tomato Chutney
Prep Time
Advertisement
10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 116

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

  • 10 தக்காளி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 4 பல் பூண்டு
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1/2 கப் புதினா, கொத்தமல்லி
  • 10 சின்ன வெங்காயம்
  • 10 வர மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

Instructions

  • முதலில் தக்காளி, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை நன்கு அலசி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து, அதன்பிறகு தக்காளி, கொத்தமல்லி இலை, புதினா மற்றும் வர மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் உப்பு சேர்த்து நன்கு வதக்கி அடுப்பை அணைத்து விடவும். இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு ஸ்டைல் தக்காளி சட்னி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 116kcal | Carbohydrates: 3.5g | Protein: 8g | Fat: 2g | Sodium: 98mg | Potassium: 237mg | Fiber: 7.1g | Vitamin A: 83IU | Vitamin C: 127mg | Calcium: 19mg | Iron: 5.6mg

இதனையும் படியுங்கள் : சுவையான செட்டிநாடு ஸ்டைல் வெஜிடபிள் குருமா இப்படி செய்து பாருங்கள் உடனே அனைத்தும் காலியாகிவிடும்!!!

Advertisement
Prem Kumar

Recent Posts

தித்திக்கும் தினை அல்வா ஆரோக்கியமான முறையில் இப்படி செய்து பாருங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டவே திகட்டாது!!!

பெரும்பாலும் கடைகளில் விற்கப்படும் ஸ்வீட் வகைகள் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்ற ஸ்வீட்டாக இருக்காது. ஆனால் இன்று…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 30 ஜூன் 2024!

மேஷம் இன்று உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டு திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள். இன்று உங்களுக்கு…

13 மணி நேரங்கள் ago

வீட்டில் குடைமிளகாய் இருந்தால் வாங்கினால் இந்த குடைமிளகாய் மசாலா தோசை செய்து பாருங்கள் அட்டகாசமாக!

தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும்…

1 நாள் ago

வீடே மணக்கும் சுவையான திண்டுக்கல் ஸ்டைல் குஸ்கா இப்படி செய்து பாருங்கள் இனிமேல் அடிக்கடி செய்வீர்கள்!!!

குஸ்கா என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். அசைவம் சாப்பிடாதவர்கள் கூட இந்த குஸ்காவை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது எல்லாம் வீட்டில்…

3 நாட்கள் ago

ஜூன் 27 புதன் உதயத்தால் கவலைகளை எதிர்கொள்ளப் போகும் ராசிக்காரர்கள்

மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன் மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு…

4 நாட்கள் ago

பஞ்சாபி ஸ்டைல் தம் ஆலு கிரேவி இப்படி செய்து பாருங்கள் இரண்டு சப்பாத்தி அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…

4 நாட்கள் ago