- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- dinner
நீங்கள் செட்டிநாடு ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுபவரா? உங்கள் வீட்டிலும் செட்டிநாடு ஸ்டைலில் சமைக்க விரும்புகிறீர்களா? இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டிருந்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக குருமா இருந்தால் நன்றாக இருக்கும். அதுவும் செட்டிநாடு வெஜிடேபிள் குருமா செய்தால் இன்னமும் அட்டகாசமாக இருக்கும் அல்லவா? ஆகையால் இந்த பதிவில் செட்டிநாடு குருமா எப்படி செய்வதென்று பார்க்கலாம். இந்த குருமா செய்வது மிகவும் சுலபம். ஏன் பேச்சுலர்கள் கூட இதை செய்யலாம். இந்த குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் சூப்பராக இருக்கும். மேலும் இது அனைவரும் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடக்கூடிய வகையில் சுவையாகவும் இருக்கும்.
முக்கியமாக இது செய்வதற்கு ஈஸியாக இருக்கும். இட்லி, தோசை என்றால் அதனுடன் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் தான் செய்ய வேண்டும். அதேபோல் சப்பாத்தி, பூரி என்றால் அதனுடன் தொட்டுக்கொள்ள தக்காளி தொக்கு, சென்னா மசாலா இதை தான் செய்ய வேண்டும். ஆனால் இவ்வாறான அனைத்து விதமான உணவுகளுடன் சாப்பிட மிகவும் சூப்பரான சுவையில் இருக்கும் ஒரு உணவுப் பொருள் என்றால் அது குருமா மட்டும் தான். இதனை ஒரு முறை செய்து பாருங்கள், இதன் ருசிக்கு அனைவரும் அடிமை ஆகி விடும் அளவிற்கு இதன் சுவை மிக பிரமாதமாக இருக்கும். காலை உணவாக இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் என செய்தாலும் குருமாவுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடும் சுவையே தனி தான். அந்த வகையில் செட்டிநாடு வெஜிடபிள் குருமா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : அட்டகாசமான ருசியில் செட்டிநாடு பன்னீர் கிரேவி இப்படி செய்து பாருங்க! சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு பக்காவான கிரேவி!
Ingredients
Method
முதலில் வெங்காயம், தக்காளி இரண்டையும் நன்கு அலசி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளை மற்றும் கேரட்டை தோல் நீக்கி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து லேசாக வறுத்து ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும் பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல், முந்திரி சேர்த்து நன்கு வதக்கி ஆற விடவும்.
பின் இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் காய்கறிகளை சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் பொடித்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
பின் குக்கரை திறந்து கரம் மசாலா தூள், கொத்தமல்லி தூவி கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு வெஜிடபிள் குருமா தயார்.






