குக் வித் கோமாளியில் சிருஷ்டி செய்த காரசாரமான செட்டிநாடு வெஷ் கிரேவி இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

செட்டிநாடு உணவுகளின் சுவை சைவ பிரியர்களுக்கும் சரி, அசைவ பிரியர்களுக்கும் சரி மிகவும் பிடித்தமான ஒன்று. செட்டிநாடு உணவின் மசாலா நாவை சுண்டி இழுக்கும். தூக்கலான மசாலா சேர்த்த நாட்டுக்கோழி குழம்பு, ஆட்டுக்கறிக் குழம்பு, காரைக்குடி இறால் என அசைவத்தில் மெனு வரிசைக்கட்டி நிற்க, சைவத்திலும் காரக்குழம்பு, கூட்டு, மசியல், பொரியல், துவையல், பிரட்டல், பருப்பு உருண்டை குழம்பு என ஏராளமான பிரத்தியேக செட்டிநாடு உணவுகள் உள்ளன.

-விளம்பரம்-

தமிழகத்தில் காரைக்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் செட்டிநாடு உணவுகள் சமைக்கப்படுகின்றன. பல வகையான மசாலாப் பொருட்களை ஃபிரஷாக அரைத்து சமையலில் பயன்படுத்துவது இந்த உணவின் தனித்துவம். அந்த வகையில் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது குக் வித் கோமாளியில் சிருஷ்டி செய்த செட்டிநாடு ஸ்பெஷல் வெஜ் கிரேவி.

- Advertisement -

செட்டிநாடு வெஜ் கிரேவியை நாம் மற்ற குழம்பு சாதத்திற்கு சைட் டிஷ் ஆகவோ, அல்லது சாதத்தில் போட்டு பிரட்டியோ, அல்லது சப்பாத்தி, நான், மற்றும் பரோட்டாக்கு சைட் டிஷ் ஆகவும் நாம் உண்ணலாம். ஆனால் சாதத்தில் போட்டு பிரட்டி சாப்பிடுவதை விட இவை பரோட்டாவுக்கு ஒரு அசத்தலான காம்பினேசன் ஆக இருக்கும். ஒரு முறை பரோட்டாவை இந்த செட்டிநாடு வெஜ் கிரேவியுடன் சுவைத்தால் போதும் இதனின் சுவை நாக்கிலேயே தங்கிவிடும்.

Print
No ratings yet

செட்டிநாடு வெஜ் கிரேவி | Chettinad veg gravy recipe in tamil

செட்டிநாடு உணவுகளின் சுவை சைவ பிரியர்களுக்கும் சரி, அசைவ பிரியர்களுக்கும் சரி மிகவும் பிடித்தமான ஒன்று. செட்டிநாடு உணவின் மசாலா நாவை சுண்டி இழுக்கும். சைவத்திலும் காரக்குழம்பு, கூட்டு, மசியல், பொரியல், துவையல், பிரட்டல், பருப்பு உருண்டை குழம்பு என ஏராளமான பிரத்தியேக செட்டிநாடு உணவுகள் உள்ளன. தமிழகத்தில் காரைக்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் செட்டிநாடு உணவுகள் சமைக்கப்படுகின்றன. பல வகையான மசாலாப் பொருட்களை ஃபிரஷாக அரைத்து சமையலில் பயன்படுத்துவது இந்த உணவின் தனித்துவம். அந்த வகையில் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது குக் வித் கோமாளியில் சிருஷ்டி செய்த செட்டிநாடு ஸ்பெஷல் வெஜ் கிரேவி.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: veg gravy
Yield: 4 People
Calories: 25kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

மசாலா அரைக்க

  • 2 டீஸ்பூன் மல்லி             
  • 3/4 டீஸ்பூன் மிளகு
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் சீரகம் ‌
  • 9 காய்ந்த மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1/4 கப் தேங்காய்
  • 6 பல் பூண்டு
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 10 முந்திரி
  • 1 டீஸ்பூன் கசகசா

கிரேவி செய்ய

  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 தக்காளி
  • 1 கேரட்
  • 50 கி பீன்ஸ்
  • 1 உருளைக்கிழங்கு   
  • 1/4 கப் பச்சை பட்டாணி
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • கொத்தமல்லி தழை சிறிதளவு

செய்முறை

  • முதலில் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இவை ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
  • பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் கேரட் போன்ற காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளியை மிக்ஸியில் அரைத்து சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • இரண்டு நிமிடங்கள் கழித்து நறுக்கிய காய்கறிகள் மற்றும் ‌பச்சை பட்டாணி சேர்த்து கலந்து விட்டு, மஞ்சள்தூள் உப்பு, சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.
  • அதன்பிறகு நாம் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.
  • காய்கறிகள் நன்கு வெந்து, தண்ணீர் வற்றி வரவும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு வெஜ் கிரேவி தயார்.

Nutrition

Serving: 700g | Calories: 25kcal | Carbohydrates: 6g | Protein: 0.5g | Fat: 0.2g | Sodium: 69mg | Potassium: 320mg | Fiber: 1.5g | Vitamin A: 835IU | Calcium: 69mg | Iron: 0.3mg