காரசாரமான செட்டிநாடு முட்டை பிரியாணி இது போன்று சுலபமாக வீட்டில் செய்து கொடுங்க! ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாது!

காரைக்குடி செட்டிநாட்டு உணவுகளானது தனித்துவமான மசாலாப் பொருட்கள் மற்றும் நுட்பமான சுவைகளின் மந்திர கலவையாகும். தனித்துவமான நறுமணம் மற்றும் ருசி இவற்றை ஒரு சிறந்த சமையல் படைப்பாக ஆக்குகின்றன. காரைக்குடி செட்டிநாடு உணவு வகைகளுக்கு உலக அளவில் எந்த அறிமுகமும் தேவையில்லை, ஏனெனில் இது

By Prem Kumar · 28/10/2024

காரைக்குடி செட்டிநாட்டு உணவுகளானது தனித்துவமான மசாலாப் பொருட்கள் மற்றும் நுட்பமான சுவைகளின் மந்திர கலவையாகும். தனித்துவமான நறுமணம் மற்றும் ருசி இவற்றை ஒரு சிறந்த சமையல் படைப்பாக ஆக்குகின்றன. காரைக்குடி செட்டிநாடு உணவு வகைகளுக்கு உலக அளவில் எந்த அறிமுகமும் தேவையில்லை, ஏனெனில் இது உலகெங்கிலும் உள்ள பல உணவுப் பிரியர்களை அதன் செழுமையான, காரம் மற்றும் தனித்துவமான சுவை உள்ளிட்ட அம்சங்களுடன் கவர்ந்துள்ளது. பொதுவாக பிரியாணி என்றாலே அதற்கு தனி மவுசு தான். அனைவருக்கும் தெரிந்தது போலவே சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி தான் பிரியாணிகளில் பெரும்பாலானோரால் விரும்பி உண்ண படுகிறது. தமிழ்நாட்டிலும் பலவிதமான பிரியாணிகள் கிடைக்கும் உதாரணமாக செட்டிநாடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி மற்றும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ஆகியவை மிக மிக புகழ்பெற்றது. ஆனால் முட்டை பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களுக்காக இந்த முட்டை பிரியாணி ரெசிபி.

தினமும் சாதத்திற்கு சாம்பார், புளிக்குழம்பு செய்து போரடித்து விட்டது என்றால், அதிகம் சிரமப்படாமல், அதே சமயம் ஒரு சுவையான சமையலை மதியம் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால் இந்த செட்டிநாடு முட்டை பிரியாணியை செய்து சாப்பிடுங்கள். இந்த செட்டிநாடு முட்டை பிரியாணி செய்வது மிகவும் சுலபம். வீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில் இந்த பிரியாணியை செய்து சாப்பிடலாம். முக்கியமாக இது பேச்சுலர்களுக்கான ரெசிபி என்றே கூறலாம். செட்டிநாடு ஸ்டைலில் எந்த உணவு செய்தாலும் வழக்கமாக சாப்பிடும் அளவை விட அன்றைக்கு அதிகமாகவே சாப்பிடுவோம். எனவே வீடே மணக்கும் அளவிற்கு செட்டிநாடு முட்டை பிரியாணி வைப்பது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க ருசியான செட்டிநாடு மட்டன் கிரேவி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு பருக்கை சாதம் கூட மிச்சமாகது!

Recipes AMP · Quick view
View full