வீடே மணக்க மணக்க ருசியான செட்டிநாடு மட்டன் கிரேவி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு பருக்கை சாதம் கூட மிச்சமாகது!

- Advertisement -

நீங்கள் அசைவ பிரியர்களா அப்போ உங்களுக்காகவே இந்த ரெசிபி. செட்டிநாடு என்றாலே பாரம்பரிய உணவுகள் தான் நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வரும். செட்டிநாடு சமையல் முறை தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு சமையல் முறை. குறிப்பாக அசைவ உணவுகளுக்கு செட்டிநாடு சமையல் முறை பெயர் போனவை. அதிலும் குறிப்பாக செட்டிநாடு சிக்கன், செட்டிநாடு மட்டன் போன்ற உணவுகள் தமிழக அளவில் மிகவும் பிரசத்தி பெற்ற உணவு வகைகள் ஆகும். அந்த வரிசையில் இன்று நாம் செட்டிநாடு முறையில் சுவையான மட்டன் கிரேவியை செய்ய உள்ளோம். மட்டன் வகைகளிலே செட்டிநாடு மட்டன் கிரேவி மிகவும் சுவையானது. இந்த கிரேவியை பார்த்தாலே அனைவருக்கும் பசி எடுக்கும். மேலும் இதன் மணத்திற்கு ஈடு வேறு எதிலும் இருக்காது. இந்த மட்டன் கிரேவியானது வழக்கமாக செய்கின்ற வகையில் இருந்து சற்று மாற்றாக இருக்கும். இதனை செய்யும் போதே வீடு முழுவதும் கம கம என்ற வாசனை வரும். இந்த மட்டன் கிரேவியினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் விதத்தில் சுவை மிக பிரமாதமாக இருக்கும்.

-விளம்பரம்-

இதனை சாதம, இட்லி, தோசை என்று அனைத்திற்கும் அருமையாக இருக்கும். சொல்லும் போதே நாவிற்கு சுவை தரும் செட்டிநாடு மட்டன் கிரேவி செய்வது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்துகொண்டு உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள். மட்டன் கிரேவி ஒரே மாதிரியான சுவையில் சாப்பிட்டு அலுத்து போகிருபவர்களுக்கும் சமைக்கும் தாய்மார்களுக்கும் இன்றைய பதிவு மிகவும் உதவியானதாக இருக்கும். செட்டிநாடு மட்டன் கிரேவியை நாம் மற்ற குழம்பு சாதத்திற்கு சைட் டிஷ் ஆகவோ, அல்லது சாதத்தில் போட்டு பிரட்டியோ, அல்லது சப்பாத்தி, நாண், மற்றும் பரோட்டாக்கு சைட் டிஷ் ஆகவும் நாம் உண்ணலாம். ஆனால் சாதத்தில் போட்டு பிரட்டி சாப்பிடுவதை விட இவை பரோட்டாவுக்கு ஒரு அசத்தலான காம்பினேசன் ஆக இருக்கும். இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

- Advertisement -
Print
3.25 from 4 votes

செட்டிநாடு மட்டன் கிரேவி | Chettinadu Mutton Gravy Recipe In Tamil

நீங்கள் அசைவ பிரியர்களா அப்போ உங்களுக்காகவே இந்த ரெசிபி. செட்டிநாடு என்றாலே பாரம்பரிய உணவுகள் தான் நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வரும். செட்டிநாடு சமையல் முறை தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு சமையல் முறை. குறிப்பாக அசைவ உணவுகளுக்கு செட்டிநாடு சமையல் முறை பெயர் போனவை. அதிலும் குறிப்பாக செட்டிநாடு சிக்கன், செட்டிநாடு மட்டன் போன்ற உணவுகள் தமிழக அளவில் மிகவும் பிரசத்தி பெற்ற உணவு வகைகள் ஆகும். அந்த வரிசையில் இன்று நாம் செட்டிநாடு முறையில் சுவையான மட்டன் கிரேவியை செய்ய உள்ளோம். மட்டன் வகைகளிலே செட்டிநாடு மட்டன் கிரேவி மிகவும் சுவையானது. இந்த கிரேவியை பார்த்தாலே அனைவருக்கும் பசி எடுக்கும். மேலும் இதன் மணத்திற்கு ஈடு வேறு எதிலும் இருக்காது. இந்த மட்டன் கிரேவியானது வழக்கமாக செய்கின்ற வகையில் இருந்து சற்று மாற்றாக இருக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Chettinadu Mutton Gravy
Yield: 4 People
Calories: 120kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 குக்கர்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/4 கி மட்டன்
  • 150 கி சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • பின்‌ அதே குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் வேக வைத்த மட்டன் சேர்த்து, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து நாம் வறுத்து அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் மட்டனுக்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் அருமையான சுவையான செட்டிநாடு மட்டன் கிரேவி தயார்.

Nutrition

Serving: 350g | Calories: 120kcal | Carbohydrates: 3.8g | Protein: 18.6g | Fat: 9.2g | Sodium: 98mg | Potassium: 235mg | Vitamin C: 11.2mg | Calcium: 8.7mg | Iron: 2.93mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் செட்டிநாடு கத்தரிக்காய் மசாலா இப்படி செஞ்சி பாருங்க அட்டகாசமான ருசியில் இருக்கும்!