செட்டிநாடு வெண்டைக்காய் காரக்குழம்பு

தென்னிந்திய சமையல்களில் குழும்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. ஏனென்றால், ஒரு குழம்பில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக சாம்பாரில் பருப்பு சாம்பார், முருங்கை சாம்பார், முள்ளங்கி சாம்பார் என பல வகைகள் உள்ளன. இதில் ஆச்சரியமான விடயம் என்னெவன்றால் இவை ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான சுவையும், ருச

By Prem Kumar · 24/1/2024

தென்னிந்திய சமையல்களில் குழும்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. ஏனென்றால், ஒரு குழம்பில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக சாம்பாரில் பருப்பு சாம்பார், முருங்கை சாம்பார், முள்ளங்கி சாம்பார் என பல வகைகள் உள்ளன. இதில் ஆச்சரியமான விடயம் என்னெவன்றால் இவை ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான சுவையும், ருசியும் உண்டு. நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு.

இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். அவற்றை தயார் செய்வது சில சமயத்தில் கடினம் போன்று தோன்றும். ஆனால் அது ரொம்பவும் ஈஸி ஆகும். அந்த வகையில், சுவையான வெண்டைக்காய் காரக்குழம்பு செய்வதற்கான சுலபமான செய்முறையை இங்கு பார்க்கலாம். அதுவும் இன்று நாம் பார்க்கப் போவது செட்டிநாடு ஸ்டைலில் வெண்டைக்காய் கார குழம்பு எப்படி செய்வது என்பதைப் பற்றி தான்.

இந்த வெண்டைக்காய் கார குழம்பு சாதம் மற்றும் இட்லியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். பொதுவாக காரக்குழம்பு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் செட்டிநாடு சுவையில் காரக்குழம்பு வைத்தால் யாருக்குத்தான் பிடிக்காது. செட்டிநாடு ஸ்டைலில் எந்த உணவு செய்தாலும் வழக்கமாக சாப்பிடும் அளவை விட அன்றைக்கு அதிகமாகவே சாப்பிடுவோம். கார குழம்பு பொதுவாக முருங்கை, கத்தரி போன்ற காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் வெண்டைக்காயால் செய்யப்படும் காரக் குழம்பு பெரிதும் ஆசைக்குறியது. வெண்டைக்காயை வாரம் ஒருமுறை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் மூளை செயல்பாடு அதிகரிக்கும். அதிலும் இதனுடன் தேங்காய் சேர்த்து குழம்பு செய்து சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : காரசாரமான செட்டிநாடு முட்டை பிரியாணி இது போன்று சுலபமாக வீட்டில் செய்து கொடுங்க! ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாது!

Recipes AMP · Quick view
View full