செட்டிநாடு வெண்டைக்காய் காரக்குழம்பு

- Advertisement -

தென்னிந்திய சமையல்களில் குழும்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. ஏனென்றால், ஒரு குழம்பில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக சாம்பாரில் பருப்பு சாம்பார், முருங்கை சாம்பார், முள்ளங்கி சாம்பார் என பல வகைகள் உள்ளன. இதில் ஆச்சரியமான விடயம் என்னெவன்றால் இவை ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான சுவையும், ருசியும் உண்டு. நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு.

-விளம்பரம்-

இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். அவற்றை தயார் செய்வது சில சமயத்தில் கடினம் போன்று தோன்றும். ஆனால் அது ரொம்பவும் ஈஸி ஆகும். அந்த வகையில், சுவையான வெண்டைக்காய் காரக்குழம்பு செய்வதற்கான சுலபமான செய்முறையை இங்கு பார்க்கலாம். அதுவும் இன்று நாம் பார்க்கப் போவது செட்டிநாடு ஸ்டைலில் வெண்டைக்காய் கார குழம்பு எப்படி செய்வது என்பதைப் பற்றி தான்.

- Advertisement -

இந்த வெண்டைக்காய் கார குழம்பு சாதம் மற்றும் இட்லியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். பொதுவாக காரக்குழம்பு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் செட்டிநாடு சுவையில் காரக்குழம்பு வைத்தால் யாருக்குத்தான் பிடிக்காது. செட்டிநாடு ஸ்டைலில் எந்த உணவு செய்தாலும் வழக்கமாக சாப்பிடும் அளவை விட அன்றைக்கு அதிகமாகவே சாப்பிடுவோம். கார குழம்பு பொதுவாக முருங்கை, கத்தரி போன்ற காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் வெண்டைக்காயால் செய்யப்படும் காரக் குழம்பு பெரிதும் ஆசைக்குறியது. வெண்டைக்காயை வாரம் ஒருமுறை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் மூளை செயல்பாடு அதிகரிக்கும். அதிலும் இதனுடன் தேங்காய் சேர்த்து குழம்பு செய்து சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Print
4 from 2 votes

செட்டிநாடு வெண்டைக்காய் காரக்குழம்பு | Chettinadu Ladies Finger Curry Recipe In Tamil

தென்னிந்திய சமையல்களில் குழும்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. ஏனென்றால், ஒரு குழம்பில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக சாம்பாரில் பருப்பு சாம்பார், முருங்கை சாம்பார், முள்ளங்கி சாம்பார் என பல வகைகள் உள்ளன. இதில் ஆச்சரியமான விடயம் என்னெவன்றால் இவை ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான சுவையும், ருசியும் உண்டு. நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு. இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். அவற்றை தயார் செய்வது சில சமயத்தில் கடினம் போன்று தோன்றும். ஆனால் அது ரொம்பவும் ஈஸி ஆகும். அந்த வகையில், சுவையான வெண்டைக்காய் காரக்குழம்பு செய்வதற்கான சுலபமான செய்முறையை இங்கு பார்க்கலாம். அதுவும் இன்று நாம் பார்க்கப் போவது செட்டிநாடு ஸ்டைலில் வெண்டைக்காய் கார குழம்பு எப்படி செய்வது என்பதைப் பற்றி தான்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Chettinadu Ladys Finger Curry
Yield: 4 People
Calories: 78kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/4 கி வெண்டைக்காய்
  • புளி எலுமிச்சை அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு                            
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு  தேவையான அளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி                      
  • 1 டீஸ்பூன் சீரகம் 
  • 1/2 கப் தேங்காய்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  

செய்முறை

  • முதலில் வெண்டைக்காயை கழுவி ஒரு துணியில் துடைத்து விட்டு பெரிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெண்டைக்காய், பெரிய வெங்காயம், வெந்தயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • புளியை சிறிது நேரம் ஊற வைத்து ஊறவைத்து நன்கு கரைத்துக்கொள்ளவும். அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் ஒரு குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • குழம்பு கொதித்து கொண்டிருக்கும்போது அத்துடன் தக்காளியும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், வெங்காயம், சீரகம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கும் புளிக் கரைசல் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  • குழம்பின் பச்சை வாசனை போனதும் அதில் வெண்டைக்காய் சேர்த்து கொதிக்க விடவும். வெண்டைக்காய் ஏற்கனவே வதக்கி இருப்பதால் சிறிது நேரம் வேக விட்டால் போதுமானது.
  • குழம்பு கொதித்து கெட்டியானதும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  • பின் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
  • அவ்வளவுதான் இப்போது சூடான மற்றும் சுவையான காரசாரமான செட்டிநாடு வெண்டைக்காய் கார குழம்பு தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 78kcal | Carbohydrates: 3.6g | Protein: 7.5g | Fat: 2.2g | Potassium: 256mg | Fiber: 2g | Vitamin A: 46IU | Vitamin C: 13mg | Calcium: 50mg | Iron: 4.12mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான செட்டிநாடு முட்டை பிரியாணி இது போன்று சுலபமாக வீட்டில் செய்து கொடுங்க! ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாது!