- Advertisement -
செட்டிநாடு முள்ளங்கி மசாலா உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த மசாலா வெள்ளை சுடு சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம். முற்றிலும் வித்தியாசமாக முள்ளங்கியை வைத்து ஒரு ரெசிபி செய்ய வேண்டுமென்றால் இப்படி செஞ்சு பாருங்க.
-விளம்பரம்-
புது விதமாக செட்டிநாடு முள்ளங்கி மசாலா இப்படி மட்டும் செய்து பாருங்கள். இது முள்ளங்கியில் செய்த பொரியலா என்று எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு இதன் சுவை அவ்வளவு அற்புதமாக இருக்கும்.
- Advertisement -
நீர்ச்சத்து நிறைந்த முள்ளங்கியை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். நிறைய பேருக்கு முள்ளங்கியில் இருந்து வீசும் ஒரு வாடை பிடிக்காது. அந்த வாடை இந்த செட்டிநாடு முள்ளங்கி மசாலாவில் சுத்தமாக தெரியாது. ஒரு முறை செய்து பாருங்களேன்.
செட்டிநாடு முள்ளங்கி மசாலா | Chettinadu Radish Masala
செட்டிநாடு முள்ளங்கி மசாலா உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த மசாலா வெள்ளை சுடு சாதத்தில் போட்டுப்பிசைந்து சாப்பிடலாம். இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளலாம். முற்றிலும் வித்தியாசமாக முள்ளங்கியை வைத்து ஒரு ரெசிபி செய்ய வேண்டுமென்றால்இப்படி செஞ்சு பாருங்க.
Calories: 19kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 முள்ளங்கி வட்டமாக வெட்டிக் கொள்ளவும்
- 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 2 பச்சை மிளகாய் கீறியது
வறுத்து அரைப்பதற்கு
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
- 1 டேபிள் ஸ்பூன் மல்லி
- 4 வரமிளகாய்
- 5 பூண்டு
- 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
- 2 தக்காளி நறுக்கியது
செய்முறை
- முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, மல்லி சேர்த்து வறுக்க. வேண்டும்.
- பின் அதில் வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளியை ஒவ்வொன்றாக சேர்த்து, சிறிது உப்பு தூவி மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
- பிறகு மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முள்ளங்கி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
- பின்அதில் நீரை ஊற்றி, சிறிது உப்பு தூவி கொதிக்க வைக்க வேண்டும். அடுத்து அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, முள்ளங்கி வேகும் வரை கொதிக்க வைத்து இறக்கினால்,
- சுவையான செட்டிநாடு முள்ளங்கி மசாலா தயார்.
Nutrition
Serving: 600g | Calories: 19kcal | Carbohydrates: 3.9g | Protein: 0.8g | Fat: 0.1g | Sodium: 39mg | Potassium: 233mg | Vitamin A: 7IU | Vitamin C: 14.8mg | Calcium: 25mg