காரசாரமான ருசியில் செட்டிநாடு மட்டன் எலும்பு குழம்பு ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்கள்!
தென் மாவட்டங்களில் மிகப்பிரபலமானது மட்டன் எலும்பு குழம்பு. மட்டன் என்றாலே அசைவ பிரியர்களின் பிடித்தமான உணவு. அதிலும் எலும்பு குழம்பு என்றால் சொல்லவே வேண்டாம். மட்டனில் உள்ள சத்துக்கள் அனைத்துமே எலும்பில் தான் இருக்கும் என்பதால், எலும்பு குழம்பு ருசிக்கு மட்டுமல்லாது ஊட்டத்துக்கு
தென் மாவட்டங்களில் மிகப்பிரபலமானது மட்டன் எலும்பு குழம்பு. மட்டன் என்றாலே அசைவ பிரியர்களின் பிடித்தமான உணவு. அதிலும் எலும்பு குழம்பு என்றால் சொல்லவே வேண்டாம். மட்டனில் உள்ள சத்துக்கள் அனைத்துமே எலும்பில் தான் இருக்கும் என்பதால், எலும்பு குழம்பு ருசிக்கு மட்டுமல்லாது ஊட்டத்துக்கும் நல்லது. மழையோ, குளிரோ, சளியோ, இருமலோ, மட்டன் எலும்பு குழப்பு சமைத்து சாப்பிட்டால் எல்லாம் தூரமாய் போகும் என்பார்கள். மட்டன் எலும்பு குழம்பு தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. மட்டன் எலும்பு குழம்பு பரோட்டா, தோசை மற்றும் இட்லிக்கு ஒரு அசத்தலான சைடிஷ் ஆக இருக்கும். ஆனால் பரோட்டா மட்டன் எலும்பு குழம்பு காம்பினேஷன்க்கு பலரின் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருக்கிறது என்றால் அது மிகையல்ல. எலும்பு குழம்பில் குளுட்டமைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளன.
இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக கண்டறியப்படுகிறது. இது குடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும், கசிவு குடல் நோயைக் குணப்படுத்தும். ஒட்டுமொத்த செரிமானத்தை மேம்படுத்தும். எலும்பு குழம்பை உட்கொள்வது வயிற்றுப்போக்கு, வாயு மற்றும் பிற செரிமான பிரச்னைகளுக்கு உதவலாம். இது எடை இழப்புக்கு உதவும். இதில் நிறைய புரதம் உள்ளது, இது மெலிந்த தசைகளை உருவாக்குவதற்கும் கலோரிகளை எரிப்பதற்கும் அவசியம். செட்டிநாடு சமையலில் மிகப் பிரபலமானது இந்த மட்டன் எலும்பு குழம்பு. செட்டிநாட்டு சமையல் அலாதியான சுவை கொண்டது. அதிலும் அசைவ சமையலில் செட்டிநாட்டு சமையலுக்கு ஈடு இணை இல்லை எனலாம். மட்டன் எலும்பு குழம்பு சுவையோடு உடல் ஆரோக்கியத்திற்காகவும் செய்து கொடுப்பார்கள். அதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த மட்டன் எலும்பு குழம்பு செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.
இதனையும் படியுங்கள் : சூப்பரான பாய் வீட்டு மட்டன் சால்னா ஒரு தரம் இப்படி வீட்டிலயே செஞ்சி கொடுங்க பாருங்க அசந்து போய்விடுவார்கள்!