தென் மாவட்டங்களில் மிகப்பிரபலமானது மட்டன் எலும்பு குழம்பு. மட்டன் என்றாலே அசைவ பிரியர்களின் பிடித்தமான உணவு. அதிலும் எலும்பு குழம்பு என்றால் சொல்லவே வேண்டாம். மட்டனில் உள்ள சத்துக்கள் அனைத்துமே எலும்பில் தான் இருக்கும் என்பதால், எலும்பு குழம்பு ருசிக்கு மட்டுமல்லாது ஊட்டத்துக்கும் நல்லது. மழையோ, குளிரோ, சளியோ, இருமலோ, மட்டன் எலும்பு குழப்பு சமைத்து சாப்பிட்டால் எல்லாம் தூரமாய் போகும் என்பார்கள். மட்டன் எலும்பு குழம்பு தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. மட்டன் எலும்பு குழம்பு பரோட்டா, தோசை மற்றும் இட்லிக்கு ஒரு அசத்தலான சைடிஷ் ஆக இருக்கும். ஆனால் பரோட்டா மட்டன் எலும்பு குழம்பு காம்பினேஷன்க்கு பலரின் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருக்கிறது என்றால் அது மிகையல்ல. எலும்பு குழம்பில் குளுட்டமைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளன.
இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக கண்டறியப்படுகிறது. இது குடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும், கசிவு குடல் நோயைக் குணப்படுத்தும். ஒட்டுமொத்த செரிமானத்தை மேம்படுத்தும். எலும்பு குழம்பை உட்கொள்வது வயிற்றுப்போக்கு, வாயு மற்றும் பிற செரிமான பிரச்னைகளுக்கு உதவலாம். இது எடை இழப்புக்கு உதவும். இதில் நிறைய புரதம் உள்ளது, இது மெலிந்த தசைகளை உருவாக்குவதற்கும் கலோரிகளை எரிப்பதற்கும் அவசியம். செட்டிநாடு சமையலில் மிகப் பிரபலமானது இந்த மட்டன் எலும்பு குழம்பு. செட்டிநாட்டு சமையல் அலாதியான சுவை கொண்டது. அதிலும் அசைவ சமையலில் செட்டிநாட்டு சமையலுக்கு ஈடு இணை இல்லை எனலாம். மட்டன் எலும்பு குழம்பு சுவையோடு உடல் ஆரோக்கியத்திற்காகவும் செய்து கொடுப்பார்கள். அதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த மட்டன் எலும்பு குழம்பு செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.
செட்டிநாடு மட்டன் எலும்பு குழம்பு | Chettinadu Mutton Bone Curry Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 வாணலி
- 1 மிக்ஸி
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 1/2 கி மட்டன் எலும்பு
- 2 பெரிய வெங்காயம்
- 3 தக்காளி
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 டீஸ்பூன் மட்டன் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மல்லி தூள்
- 1 டீஸ்பூன் சீரகத்தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 1 கப் தேங்காய் பால்
- கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
வறுத்து அரைக்க :
- 1 கப் சின்ன வெங்காயம்
- 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 1 பிரியாணி இலை
- 10 முந்திரி
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் மல்லி
செய்முறை
- முதலில் மட்டன் எலும்பு துண்டுகளை சுத்தம் செய்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். பின் இதனை ஒரு குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு இரண்டு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
- பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் வேகவைத்த மட்டன் எலும்பை சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.
- பின் சீரகத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள், மட்டன் மசாலா தூள் சேர்த்து அதனுடன் தேங்காய் பால் சிறிதளவு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
- குழம்பு கொதித்ததும் மீதம் உள்ள தேங்காய் பால் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும். குழம்பு கொதித்து பச்சை வாசனை போனதும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான மட்டன் குழம்பு தயார். இது சாதம், இட்லி, தோசை என அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சூப்பரான பாய் வீட்டு மட்டன் சால்னா ஒரு தரம் இப்படி வீட்டிலயே செஞ்சி கொடுங்க பாருங்க அசந்து போய்விடுவார்கள்!