வீடே மணக்க மணக்க ருசியான செட்டிநாடு மட்டன் கிரேவி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு பருக்கை சாதம் கூட மிச்சமாகது!
நீங்கள் அசைவ பிரியர்களா அப்போ உங்களுக்காகவே இந்த ரெசிபி. செட்டிநாடு என்றாலே பாரம்பரிய உணவுகள் தான் நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வரும். செட்டிநாடு சமையல் முறை தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு சமையல் முறை. குறிப்பாக அசைவ உணவுகளுக்கு செட்டிநாடு சமையல் முறை பெயர் போனவை. அதிலும்
நீங்கள் அசைவ பிரியர்களா அப்போ உங்களுக்காகவே இந்த ரெசிபி. செட்டிநாடு என்றாலே பாரம்பரிய உணவுகள் தான் நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வரும். செட்டிநாடு சமையல் முறை தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு சமையல் முறை. குறிப்பாக அசைவ உணவுகளுக்கு செட்டிநாடு சமையல் முறை பெயர் போனவை. அதிலும் குறிப்பாக செட்டிநாடு சிக்கன், செட்டிநாடு மட்டன் போன்ற உணவுகள் தமிழக அளவில் மிகவும் பிரசத்தி பெற்ற உணவு வகைகள் ஆகும். அந்த வரிசையில் இன்று நாம் செட்டிநாடு முறையில் சுவையான மட்டன் கிரேவியை செய்ய உள்ளோம். மட்டன் வகைகளிலே செட்டிநாடு மட்டன் கிரேவி மிகவும் சுவையானது. இந்த கிரேவியை பார்த்தாலே அனைவருக்கும் பசி எடுக்கும். மேலும் இதன் மணத்திற்கு ஈடு வேறு எதிலும் இருக்காது. இந்த மட்டன் கிரேவியானது வழக்கமாக செய்கின்ற வகையில் இருந்து சற்று மாற்றாக இருக்கும். இதனை செய்யும் போதே வீடு முழுவதும் கம கம என்ற வாசனை வரும். இந்த மட்டன் கிரேவியினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் விதத்தில் சுவை மிக பிரமாதமாக இருக்கும்.
இதனை சாதம, இட்லி, தோசை என்று அனைத்திற்கும் அருமையாக இருக்கும். சொல்லும் போதே நாவிற்கு சுவை தரும் செட்டிநாடு மட்டன் கிரேவி செய்வது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்துகொண்டு உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள். மட்டன் கிரேவி ஒரே மாதிரியான சுவையில் சாப்பிட்டு அலுத்து போகிருபவர்களுக்கும் சமைக்கும் தாய்மார்களுக்கும் இன்றைய பதிவு மிகவும் உதவியானதாக இருக்கும். செட்டிநாடு மட்டன் கிரேவியை நாம் மற்ற குழம்பு சாதத்திற்கு சைட் டிஷ் ஆகவோ, அல்லது சாதத்தில் போட்டு பிரட்டியோ, அல்லது சப்பாத்தி, நாண், மற்றும் பரோட்டாக்கு சைட் டிஷ் ஆகவும் நாம் உண்ணலாம். ஆனால் சாதத்தில் போட்டு பிரட்டி சாப்பிடுவதை விட இவை பரோட்டாவுக்கு ஒரு அசத்தலான காம்பினேசன் ஆக இருக்கும். இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் செட்டிநாடு கத்தரிக்காய் மசாலா இப்படி செஞ்சி பாருங்க அட்டகாசமான ருசியில் இருக்கும்!