Home அசைவம் சூப்பரான மட்டன் கோலா உருண்டை ஒரு உங்கள் வீட்டிலயே ரெம்ப சுலபமாகவே செஞ்சி பாருங்கள்!

சூப்பரான மட்டன் கோலா உருண்டை ஒரு உங்கள் வீட்டிலயே ரெம்ப சுலபமாகவே செஞ்சி பாருங்கள்!

அசைவ உணவுகளில் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது தான் மட்டன். இந்த மட்டன் பலருக்கு மிகவும் விருப்பமான அசைவ உணவும் கூட. இதனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான் செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை. செட்டிநாட்டு உணவு வகைகள் அனைத்துமே கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் மிகவும் ருசியாகவும் இருக்கும். அப்படி ஒரு சுவையான ரெசிபி தான் இந்த மட்டன் கோலா உருண்டை. இது மிகவும் சுவையாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக மட்டன் பிடிக்காதவர்கள் இதனை சுவைத்தால், இதற்கு அடிமையாகி விடுவார்கள். பொதுவாக மட்டன் கோலா உருண்டை குழம்பை தென் மாவட்ட மக்கள் செய்வது வழக்கம். இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

-விளம்பரம்-

Meatballs என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த கோலா உருண்டைகள் இந்திய துணை கண்டம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகை. இவை மாமிசம் சேர்க்காமலும் செய்யப்படுகிறது. மட்டன் கோலா உருண்டைகளின் ஸ்பெஷல் என்னவென்றால் இவை நன்கு மொறு மொறுப்பாக சுவையாக இருப்பது மட்டும் இன்றி இவை ஒரு சத்தான மாலை நேர சிற்றுண்டியும் கூட. குழந்தைகளுக்கு தினசரி மாலை நேரங்களில் பிஸ்கெட் மற்றும் சிப்ஸ்களை கொடுப்பதை விட இந்த சத்தான மட்டன் கோலா உருண்டைகளை செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். நம்மில் பெரும்பாலானோர் அசைவ பிரியர்கள். அந்தவகையில், இந்த முறை மட்டனை வைத்து ருசியான மற்றும் மிருதுவான செட்டிநாடு ஸ்டைல் மட்டன் கோலா உருண்டை எப்படி செய்வதென்று இந்த பதிவில்‌ காணலாம்.

Print
No ratings yet

செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை | Chettinadu Mutton Kola Urundai Recipe In Tamil‌

அசைவ உணவுகளில் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது தான் மட்டன். இந்த மட்டன் பலருக்கு மிகவும் விருப்பமான அசைவ உணவும் கூட. இதனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான் செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை. செட்டிநாட்டு உணவு வகைகள் அனைத்துமே கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் மிகவும் ருசியாகவும் இருக்கும். அப்படி ஒரு சுவையான ரெசிபி தான் இந்த மட்டன் கோலா உருண்டை. இது மிகவும் சுவையாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக மட்டன் பிடிக்காதவர்கள் இதனை சுவைத்தால், இதற்கு அடிமையாகி விடுவார்கள். பொதுவாக மட்டன் கோலா உருண்டை குழம்பை தென் மாவட்ட மக்கள் செய்வது வழக்கம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: mutton kola urundai
Yield: 4 People
Calories: 105kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/4 கி மட்டன் கொத்து கறி
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 2 துண்டு இஞ்சி
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 வர ‌மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 2 பட்டை
  • 3 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
  • 1 முட்டை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் அவல்

செய்முறை

  • முதலில் மட்டனை நன்கு அலசி விட்டு ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
  • அவலை நன்கு வறுத்து அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் கறிவேப்பிலை,, பச்சைமிளகாய், வரமிளகாய், பட்டை, சோம்பு, வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் அதனுடன் வேகவைத்த மட்டன், பொட்டுக்கடலை சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • இதனை ஒரு பவுளுக்கு மாற்றி இதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின் வறுத்து பொடி செய்த அவலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பின் இதனை சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு‌ வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மட்டன் உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான மட்டன் கோலா உருண்டை தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 105kcal | Carbohydrates: 5.9g | Protein: 42.2g | Fat: 4.6g | Saturated Fat: 1.9g | Sodium: 151mg | Potassium: 70mg | Fiber: 1.8g | Vitamin A: 16IU | Vitamin C: 34mg | Calcium: 23mg | Iron: 60mg

இதனையும் படியுங்கள் ‌: ருசியான செட்டிநாட்டு ஸ்டைல் வெந்தயக் குழம்பு ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!