அட்டகாசமான ருசியில் செட்டிநாடு பன்னீர் கிரேவி இப்படி செய்து பாருங்க! சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு பக்காவான கிரேவி!
செட்டிநாட்டு உணவென்று சொன்னாலே, உணவு விரும்பிகளுக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்தளவுக்கு இந்தியாவின் எந்த நகரத்துக்கு சென்றாலும், அங்கு செட்டிநாடு உணவகங்கள் இருப்பதை நாம் பாக்கலாம். செட்டிநாடு உணவின் ஸ்பெஷலே அதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் தான். அந்தவகையில் சுவையான
செட்டிநாட்டு உணவென்று சொன்னாலே, உணவு விரும்பிகளுக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்தளவுக்கு இந்தியாவின் எந்த நகரத்துக்கு சென்றாலும், அங்கு செட்டிநாடு உணவகங்கள் இருப்பதை நாம் பாக்கலாம். செட்டிநாடு உணவின் ஸ்பெஷலே அதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் தான். அந்தவகையில் சுவையான செட்டிநாடு பன்னீர் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! பன்னீர் கிரேவி சப்பாத்தி, பரோட்டா, நான், போன்றவற்றுடன் சுவையாக இருக்கும். இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம். பன்னீர் கிரேவி வட இந்தியாவில் இருந்து பெறப்பட்ட உணவு வகை. இது பன்னீர் பட்டர் மசாலாவில் இருந்து வேறுபட்டது. இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக செய்யலாம். சப்பாத்தி, பரோட்டா, தவிர்த்து சீரக சாதம் வெஜிடபிள் பிரியாணி தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும்.
பன்னீர் டேஸ்ட்டான உணவு என்பது மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் பன்னீர் ஹெல்த்தியான உணவும் கூட. இந்த பன்னீரை நம் அன்றாட உணவில் சேர்த்து கொள்வதால் நமக்கு பல பயன்கள் கிடைக்கின்றன. பன்னீரில் கால்சியமும், புரதச்சத்துக்களும் உள்ளன. மேலும் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. வலுவான பற்கள் மற்றும் எலும்பு பெறவும், உடல் மெட்டாபாலிசத்தை மேம்படுத்தவும், உடல் மற்றும் மூட்டு வலியை குறைக்கவும் உதவுகிறது. தவிர பன்னீரில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை கீல்வாதத்தை எதிர்த்து போராட உதவுகிறது. இன்னும் பல விதமான நன்மைகளை பன்னீரில் உள்ளன.
இப்போ பன்னீரை செட்டிநாடு ஸ்டைலில் எப்படி சமைக்கலாம் என்று பார்ப்போம் வாங்க. சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, முட்டை கிரேவி, இறால் கிரேவி, நண்டு கிரேவி இதுபோன்ற அசைவ கிரேவி ரெசிபிக்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு சுவையான பன்னீர் மசாலா கிரேவி செய்வது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொண்டு நீங்களும் உங்கள் வீட்டில் செய்து கொடுத்து அசத்துங்கள். பன்னீர் கிரேவி வைத்து சாப்பிட்டு பாருங்கள் ரூசீகரமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அடுத்த முறையில் இதையே செய்யுங்கள் என்று விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : ருசியான பன்னீர் புலாவ் இனி இப்படி செஞ்சி பாருங்கள்! சுட சுட புலாவ் இப்படி செய்து கொடுத்தால் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!