Home அசைவம் இந்த வார கடைசியில் இறால் வாங்கி ருசியான செட்டிநாடு இறால் குழம்பு இப்படி செய்து பாருங்க!...

இந்த வார கடைசியில் இறால் வாங்கி ருசியான செட்டிநாடு இறால் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

கடல்வாழ் உயிரினங்களில் இறால் ரொம்பவும் வித்தியாசமானது. இறால் என்றால் சிலருக்கு அலாதியான ஒரு விருப்பம் உண்டு. இறால் பிரியர்களுக்கு செட்டிநாடு ஸ்டைலில் ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த செட்டிநாடு இறால் குழம்பு சுவையாக எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

-விளம்பரம்-

செட்டிநாட்டு இறால் அனைவருக்கும் பிடித்தமான உணவு. குண்டு மிளகாய், மற்றும் சின்ன வெங்காயம் போன்ற பொருட்களின் பயன்பாடு அதன் தனித்துவமானது. பாரம்பரியமாக செட்டிநாட்டுமசாலாக்கள் வலுவான மற்றும் காரமானவை. செட்டிநாடு இறால் குழம்பு சாதத்துடன் பரிமாறலாம்

பொதுவாக விடுமுறை நாட்களில் பிடித்த அசைவ உணவை சமைத்து சாப்பிடுவோம்.செட்டிநாடு இறால் குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இந்த குழம்பு செய்வதும் கஷ்டம் இல்லை. குறைவான நேரத்திலும், சுலபமாகவும், ருசியாகவும் வீட்டிலே செய்து விடலாம். இந்த குழம்பு எப்படி செய்ய வேண்டும் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்க.

Print
No ratings yet

செட்டிநாடு இறால் குழம்பு | Chettinadu Prawn Gravy

பொதுவாக விடுமுறை நாட்களில் பிடித்த அசைவ உணவைசமைத்து சாப்பிடுவோம்.செட்டிநாடு இறால் குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாகஇருக்கும். இந்த குழம்பு செய்வதும் கஷ்டம் இல்லை. குறைவான நேரத்திலும், சுலபமாகவும்,ருசியாகவும் வீட்டிலே செய்து விடலாம். இந்த குழம்பு எப்படி செய்ய வேண்டும் என்பதை கீழேகொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Gravy
Cuisine: tamil nadu
Keyword: Chettinadu Prawn Gravy
Yield: 4
Calories: 0.263kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் இறால்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 வெங்காயம் நறுக்கியது
  • 1 தக்காளி நறுக்கியது
  • 5 பல் பூண்டு அரைத்தது
  • 5 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 கப் தேங்காய் துருவியது
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் இறாலை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்த்து. 10 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விடவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து. அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் சேர்த்து, 2-3 நிமிடம் வறுக்கவும்.பிறகு சூடு ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைக்கவும்.
  • பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காயை போட்டு 2-3 நிமிடம் வறுக்கவும்.
  • பின் அதனை எடுத்து ஆறியதும், மிக்ஸியில் வறுத்த தேங்காய், பச்சை மிளகாய் போட்டு நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
  • தேங்காயை வறுத்த அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும், பின் அதில் தக்காளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கவும்.
  • தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு, 3-4 நிமிடம் வேக வைக்கவும்.
  • பின் அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள இறாலைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
  • சுவையான செட்டிநாடு இறால் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 100g | Calories: 0.263kcal | Carbohydrates: 6.1g | Protein: 31g | Fat: 12g | Cholesterol: 135mg | Sodium: 132mg | Potassium: 428mg | Fiber: 0.7g