வீடே மணக்க மணக்க ருசியான செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!
நம் நாட்டு பாரம்பரிய சமையலில் எப்போதுமே செட்டிநாடு சமையலுக்கு ருசி அதிகம். நம்மூர்களின் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு விதமான சாம்பாருக்கு பெயர் பெற்றவை. உடனுக்குடனே மசாலாக்களை ரெடி செய்து சாம்பார் வைக்க நாம் தஞ்சைக்கு சென்றால், புளி கரைத்து ஊற்றி நல்ல நிறத்துடனும் மணத்துடனும் ஒரு சாம்பா
நம் நாட்டு பாரம்பரிய சமையலில் எப்போதுமே செட்டிநாடு சமையலுக்கு ருசி அதிகம். நம்மூர்களின் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு விதமான சாம்பாருக்கு பெயர் பெற்றவை. உடனுக்குடனே மசாலாக்களை ரெடி செய்து சாம்பார் வைக்க நாம் தஞ்சைக்கு சென்றால், புளி கரைத்து ஊற்றி நல்ல நிறத்துடனும் மணத்துடனும் ஒரு சாம்பார் சாப்பிட காரைக்குடிக்கு தான் செல்ல வேண்டும். இல்லை என்றால் இந்த ரெசிபியை நீங்கள் வீட்டில் முயற்சி செய்து ஆச்சி வீட்டு சாம்பார் மணத்தை உங்கள் வீட்டுக்கும் கொண்டு வர முடியும். செட்டிநாடு முறைப்படி சூப்பரான ஒரு முள்ளங்கி சாம்பார் எப்படி வைப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
தோசை, இட்லி, பொங்கல், வடை, பணியாரம், இவைகளுக்கு தொட்டு சாப்பிட இது சூப்பரான சைடிஷ் ஆக இருக்கும். தமிழக சமையலறைகளில் சாம்பாருக்கு என்று தனியிடம் உண்டு. தமிழ்நாட்டில் செய்யப்படும் சாம்பாரானது மிகவும் அருமையாகவும், மணமிக்கதாகவும் இருக்கும். மேலும் சாம்பாரில் பல வகைகள் உள்ளன. அவை அனைத்துமே விருப்பத்தை பொறுத்ததே. ஆம், எப்படியெனில் சாம்பார் செய்யும் முறை அனைத்தும் ஒன்று தானே தவிர, அதில் சேர்க்கப்படும் காய்கறிகளைக் கொண்டு, சாம்பாரின் பெயரில் மாற்றங்கள் ஏற்படும். அப்படி வந்த ஒரு சாம்பார் தான் செட்டிநாடு முள்ளங்கி சாம்பார்.
இதன் வாசனையாலே பெரும்பாலனோருக்கு முள்ளங்கி சாம்பார் பிடிக்காது. குழந்தைகள் என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால், முள்ளங்கி நீர்ச்சத்து நிறைந்த காய். மேலும் இது சிறுநீரக கோளாறுகளுக்கு சிறந்தது. சிறுநீரக தொற்று போன்ற நோய்களுக்கு முள்ளங்கியை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனால், சிலர் வெள்ளிக்கிழமையன்று முள்ளங்கி சாம்பார் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஏனெனில் மறக்காமல் இந்த காயை வாரம் ஒரு நாள் உணவில் சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான். இந்த பதிவில் செட்டிநாடு ஸ்டைல் முள்ளங்கி சாம்பார் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் செட்டிநாடு கத்தரிக்காய் மசாலா இப்படி செஞ்சி பாருங்க அட்டகாசமான ருசியில் இருக்கும்!