வீடே மணக்க மணக்க ருசியான செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!

- Advertisement -

நம் நாட்டு பாரம்பரிய சமையலில் எப்போதுமே செட்டிநாடு சமையலுக்கு ருசி அதிகம். நம்மூர்களின் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு விதமான சாம்பாருக்கு பெயர் பெற்றவை. உடனுக்குடனே மசாலாக்களை ரெடி செய்து சாம்பார் வைக்க நாம் தஞ்சைக்கு சென்றால், புளி கரைத்து ஊற்றி நல்ல நிறத்துடனும் மணத்துடனும் ஒரு சாம்பார் சாப்பிட காரைக்குடிக்கு தான் செல்ல வேண்டும். இல்லை என்றால் இந்த ரெசிபியை நீங்கள் வீட்டில் முயற்சி செய்து ஆச்சி வீட்டு சாம்பார் மணத்தை உங்கள் வீட்டுக்கும் கொண்டு வர முடியும். செட்டிநாடு முறைப்படி சூப்பரான ஒரு முள்ளங்கி சாம்பார் எப்படி வைப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

-விளம்பரம்-

தோசை, இட்லி, பொங்கல், வடை, பணியாரம், இவைகளுக்கு தொட்டு சாப்பிட இது சூப்பரான சைடிஷ் ஆக இருக்கும். தமிழக சமையலறைகளில் சாம்பாருக்கு என்று தனியிடம் உண்டு. தமிழ்நாட்டில் செய்யப்படும் சாம்பாரானது மிகவும் அருமையாகவும், மணமிக்கதாகவும் இருக்கும். மேலும் சாம்பாரில் பல வகைகள் உள்ளன. அவை அனைத்துமே விருப்பத்தை பொறுத்ததே. ஆம், எப்படியெனில் சாம்பார் செய்யும் முறை அனைத்தும் ஒன்று தானே தவிர, அதில் சேர்க்கப்படும் காய்கறிகளைக் கொண்டு, சாம்பாரின் பெயரில் மாற்றங்கள் ஏற்படும். அப்படி வந்த ஒரு சாம்பார் தான் செட்டிநாடு முள்ளங்கி சாம்பார்.

- Advertisement -

இதன் வாசனையாலே பெரும்பாலனோருக்கு முள்ளங்கி சாம்பார் பிடிக்காது. குழந்தைகள் என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால், முள்ளங்கி நீர்ச்சத்து நிறைந்த காய். மேலும் இது சிறுநீரக கோளாறுகளுக்கு சிறந்தது. சிறுநீரக தொற்று போன்ற நோய்களுக்கு முள்ளங்கியை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனால், சிலர் வெள்ளிக்கிழமையன்று முள்ளங்கி சாம்பார் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஏனெனில் மறக்காமல் இந்த காயை வாரம் ஒரு நாள் உணவில் சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான். இந்த பதிவில் செட்டிநாடு ஸ்டைல் முள்ளங்கி சாம்பார் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Print
3 from 2 votes

செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் | Chettinadu Radish Sambar Recipe In Tamil

நம் நாட்டு பாரம்பரிய சமையலில் எப்போதுமே செட்டிநாடு சமையலுக்கு ருசி அதிகம். நம்மூர்களின் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு விதமான சாம்பாருக்கு பெயர் பெற்றவை. உடனுக்குடனே மசாலாக்களை ரெடி செய்து சாம்பார் வைக்க நாம் தஞ்சைக்கு சென்றால், புளி கரைத்து ஊற்றி நல்ல நிறத்துடனும் மணத்துடனும் ஒரு சாம்பார் சாப்பிட காரைக்குடிக்கு தான் செல்ல வேண்டும். இல்லை என்றால் இந்த ரெசிபியை நீங்கள் வீட்டில் முயற்சி செய்து ஆச்சி வீட்டு சாம்பார் மணத்தை உங்கள் வீட்டுக்கும் கொண்டு வர முடியும். செட்டிநாடு முறைப்படி சூப்பரான ஒரு முள்ளங்கி சாம்பார் எப்படி வைப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். தோசை, இட்லி, பொங்கல், வடை, பணியாரம், இவைகளுக்கு தொட்டு சாப்பிட இது சூப்பரான சைடிஷ் ஆக இருக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: Chettinadu Radish Sambar
Yield: 4 People
Calories: 57kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 குக்கர்
  • 1 தாளிப்பு கரண்டி

தேவையான பொருட்கள்

  • 150 கி துவரம் பருப்பு
  • 50 கி பாசிப்பருப்பு
  • 2 முள்ளங்கி
  • 2 தக்காளி
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 கப் புளி கரைசல்

அரைக்க :

  • 1 டீஸ்பூன் தனியா
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 3 வர ‌மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு

தாளிக்க :

  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 2 வர ‌மிளகாய்.

செய்முறை

  • முதலில் துவரம் பருப்பு மற்றும் பாசிப் பருப்பை நன்கு சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து அதனுடன் மஞ்சள்தூள் சேர்த்து நான்கு விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
  • பின் முள்ளங்கியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேங்காய் துருவல், தனியா, சீரகம், கடலை பருப்பு, வர மிளகாய்‌, சாம்பார் தூள் சேர்த்து வதக்கி ஒரு மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முள்ளங்கி, தக்காளி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • காய்கறிகள் சிறிது வதங்கியதும் வேக வைத்த பருப்புடன் சேர்த்து, அரைத்த விழுது, புளி கரைசல் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கி கொத்தமல்லி தழை தூவி விடவும்.
  • ஒரு‌ தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்த்து கலந்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 57kcal | Carbohydrates: 3.9g | Protein: 5.8g | Fat: 0.4g | Sodium: 39mg | Potassium: 233mg | Fiber: 1.9g | Vitamin A: 7.9IU | Vitamin C: 14.8mg | Calcium: 28mg | Iron: 1.34mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் செட்டிநாடு கத்தரிக்காய் மசாலா இப்படி செஞ்சி பாருங்க அட்டகாசமான ருசியில் இருக்கும்!