செட்டிநாடு வாழைக்காய் மசாலா இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! பக்காவான சைடிஷ் ஆகா இருக்கும்!

- Advertisement -

ஒரு வாழைக்காய் மசாலா  அசைவம் சாப்பிட முடியாத சமயத்தில் இந்த செட்டிநாடு வாழைக்காய் மசாலா நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும். இது கறி மசாலாவா , இல்லை வாழைக்காய் மசாலாவா, என்ற சந்தேகம் உங்களுக்கே வரும்.  வாழைக்காய் வீட்டில் இருந்தால் இன்னைக்கு இந்த செட்டிநாடு வாழைக்காய் மசாலா செய்து பாருங்க.

-விளம்பரம்-

சில நேரம் அசைவ சாப்பாடு சாப்பிட முடியாது. ஆனால் மசாலாவாசத்தோடு நாவிற்கு ருசி தரும், வேறு ஏதாவது சமைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று மனசு சொல்லும். அந்த சமயத்தில் ஒரே ஒரு வாழைக்காய் இருந்தால் போதும். அசத்தலான செட்டிநாடு வாழைக்காய் மசாலா  மிக மிக சுலபமாக தயார் செய்து விடலாம். சுட சுட சாதம், சப்பாத்தி, பூரி, வெரைட்டி ரைஸுக்கு கூட இதை சைடிஷ் ஆக வைத்து அசத்தலாம். வாங்க அந்த செட்டிநாடு வாழைக்காய் மசாலா செய்முறையை எப்படி செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -
Print
No ratings yet

செட்டிநாடு வாழைக்காய் மசாலா | Chettinadu Raw Banana Masala Recipe In Tamil

செட்டிநாடு வாழைக்காய் மசாலா. இது கறி மசாலாவா , இல்லை வாழைக்காய்மசாலாவா, என்ற சந்தேகம் உங்களுக்கே வரும். வாழைக்காய் வீட்டில் இருந்தால் இன்னைக்கு இந்த செட்டிநாடு வாழைக்காய் மசாலாசெய்து பாருங்க.சில நேரம் அசைவ சாப்பாடு சாப்பிட முடியாது.ஆனால் மசாலா வாசத்தோடு நாவிற்கு ருசி தரும், வேறு ஏதாவது சமைத்து சாப்பிட்டால் நன்றாகஇருக்குமே என்று மனசு சொல்லும். அந்த சமயத்தில் ஒரே ஒரு வாழைக்காய் இருந்தால் போதும்.அசத்தலான செட்டிநாடு வாழைக்காய் மசாலா  மிகமிக சுலபமாக தயார் செய்து விடலாம். சுட சுட சாதம், சப்பாத்தி, பூரி, வெரைட்டி ரைஸுக்குகூட இதை சைடிஷ் ஆக வைத்து அசத்தலாம். வாங்க அந்த செட்டிநாடு வாழைக்காய் மசாலா செய்முறையைஎப்படி செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: MASALA
Cuisine: tamil nadu
Keyword: Chettinadu Raw Banana Masala
Yield: 4
Calories: 105kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 வாழைக்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 கொத்தமல்லி கைப்பிடிஅளவு

அரைக்க

  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்புன் இஞ்சி விழுது
  • 5 பல் பூண்டு
  • தேங்காய் சிறிது
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 5 காய்ந்த மிளகாய்

தாளிக்க

  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • முதலில் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைக்காய் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.
     
  • அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு நீர் தௌpத்து அரைக்கவும்,
  • பின்பு அதே வாணலியில் கடுகு. சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், சேர்த்து வதக்கவும் பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • அதில் வதக்கி ஆற வைத்த வாழைக்காய்சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும், அரைத்த மசாலா சேர்த்து நீர் தெளித்து வேக விடவும். வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
  • சுவையான செட்டிநாட்டு வாழைக்காய் மசாலா தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 22.84g | Protein: 1.09g | Fat: 0.33g | Fiber: 3.1g | Iron: 0.26mg