சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! ஆஹா இதன் ருசியே அசத்தலாக இருக்கும்!

இது வரை நீங்கள் ருசிக்காத அளவுக்கு ஒரு ருசியில், வாழைக்காய் ஃப்ரையை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து, கொஞ்சம் வித்தியாசமாக செய்ய போகும் ரெசிபி இது. நீங்கள் செட்டிநாடு ரெசிபிக்களின் பிரியரா? உங்கள் வீட்டில் செட்டி

By Prem Kumar · 15/1/2024

இது வரை நீங்கள் ருசிக்காத அளவுக்கு ஒரு ருசியில், வாழைக்காய் ஃப்ரையை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து, கொஞ்சம் வித்தியாசமாக செய்ய போகும் ரெசிபி இது. நீங்கள் செட்டிநாடு ரெசிபிக்களின் பிரியரா? உங்கள் வீட்டில் செட்டிநாடு ரெசிபிக்களை செய்ய அதிக ஆர்வம் கொள்பவரா? அப்படியானால் உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்துவதற்கு இது ஒரு அற்புதமான ரெசிபி. அது தான் செட்டிநாடு வாழைக்காய் வறுவல். வாழைப்பழத்தைப் போன்றே வாழைக்காயும் ஏராளமான சத்துக்களைத் தன்னுள் கொண்டது.

பலர் வாழைக்காய் வாய்வுத் தொல்லையை உண்டாக்கும் என அதை தவிர்ப்பார்கள். ஆனால் அவ்வாறு செய்வது தவறு. முக்கியமாக வாழைக்காயைத் தவிர்ப்பது என்பது கூடாது. அதை சமைக்கும் போது, பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் வாய்வு தொல்லையைத் தவிர்க்கலாம். இந்த வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இவை ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் ஐ போன்றே வெளியே crispy ஆகவும் உள்ளே மிருதுவாகவும் இருப்பதால் இதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்பார்கள். பாரம்பரிய செட்டிநாடு சமையல் முறை தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு சமையல் முறை. செட்டிநாடு சமையல் முறைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில் இங்கு நாம் காண இருப்பது செட்டிநாடு வாழைக்காய் வறுவல்.

இதை செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் என்றும் அழைக்கின்றார்கள். இவை தமிழகத்தில் உள்ள காரைக்குடி மற்றும் சிவகங்கை பகுதிகளில் நடைபெறும் திருமண விருந்துகளில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். வாழைக்காய் பஜ்ஜி செய்வது போல நீள நீளமாக நறுக்கி இந்த வறுவல் செய்ய வேண்டும். பார்ப்பதற்கு மீனை போலவே இருக்கும் இந்த வாழைக்காய், வாழைக்காய் வறுவலா? இல்லை மீன் வறுவலா? என்று தெரியாத அளவிற்கு அட்டகாசமாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : காரசாரமான வாழைக்காய் கார குழம்பை ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க! சாதத்துக்கு பக்காவாக இருக்கும்!

Recipes AMP · Quick view
View full