- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
இது வரை நீங்கள் ருசிக்காத அளவுக்கு ஒரு ருசியில், வாழைக்காய் ஃப்ரையை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து, கொஞ்சம் வித்தியாசமாக செய்ய போகும் ரெசிபி இது. நீங்கள் செட்டிநாடு ரெசிபிக்களின் பிரியரா? உங்கள் வீட்டில் செட்டிநாடு ரெசிபிக்களை செய்ய அதிக ஆர்வம் கொள்பவரா? அப்படியானால் உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்துவதற்கு இது ஒரு அற்புதமான ரெசிபி. அது தான் செட்டிநாடு வாழைக்காய் வறுவல். வாழைப்பழத்தைப் போன்றே வாழைக்காயும் ஏராளமான சத்துக்களைத் தன்னுள் கொண்டது.
பலர் வாழைக்காய் வாய்வுத் தொல்லையை உண்டாக்கும் என அதை தவிர்ப்பார்கள். ஆனால் அவ்வாறு செய்வது தவறு. முக்கியமாக வாழைக்காயைத் தவிர்ப்பது என்பது கூடாது. அதை சமைக்கும் போது, பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் வாய்வு தொல்லையைத் தவிர்க்கலாம். இந்த வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இவை ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் ஐ போன்றே வெளியே crispy ஆகவும் உள்ளே மிருதுவாகவும் இருப்பதால் இதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்பார்கள். பாரம்பரிய செட்டிநாடு சமையல் முறை தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு சமையல் முறை. செட்டிநாடு சமையல் முறைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில் இங்கு நாம் காண இருப்பது செட்டிநாடு வாழைக்காய் வறுவல்.
இதை செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் என்றும் அழைக்கின்றார்கள். இவை தமிழகத்தில் உள்ள காரைக்குடி மற்றும் சிவகங்கை பகுதிகளில் நடைபெறும் திருமண விருந்துகளில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். வாழைக்காய் பஜ்ஜி செய்வது போல நீள நீளமாக நறுக்கி இந்த வறுவல் செய்ய வேண்டும். பார்ப்பதற்கு மீனை போலவே இருக்கும் இந்த வாழைக்காய், வாழைக்காய் வறுவலா? இல்லை மீன் வறுவலா? என்று தெரியாத அளவிற்கு அட்டகாசமாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான வாழைக்காய் கார குழம்பை ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க! சாதத்துக்கு பக்காவாக இருக்கும்!
Ingredients
Method
முதலில் வாழைக்காயை தோல் சீவி நீளமாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து தண்ணீர் ஊற்றி வாழைக்காயை சேர்த்து ஒரு கொதி விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சோம்பு, மிளகாய்த்தூள், உப்பு, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
அதன்பிறகு வாழைக்காயை தண்ணீர் வடிந்து நாம் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாழைக்காயை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் வறுவல் தயார்.






