Advertisement
அசைவம்

இந்த வாரம் உங்க வீட்ல சிக்கன் எடுத்தா குக் வித் கோமாளியில் பூஜா செய்த சிக்கன் ஃபிரிக்காசி செஞ்சு பாருங்க!

Advertisement

சிக்கன் ஃபிரிக்காசி அப்படின்னா என்னன்னு ஒரே குழப்பமா இருக்கா ஒயிட் சிக்கன் தான் இந்த மாதிரி சொல்றோம் இதோட டேஸ்ட் ஒயிட் சாஸ் பாஸ்தா மாதிரியே இருக்கும். ஒயிட் சாஸ் பாஸ்தா ரொம்ப ரொம்ப பிடிக்கும் அப்படின்னா கண்டிப்பா இந்த ரெசிபியும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். முக்கியமாக குழந்தைகள் எல்லாருமே இதை விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைங்க மட்டுமில்லாமல் பெரியவங்களும் கூட இந்த ரெசிபி ஏன் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.

நம்ம சிக்கன் எடுத்தா எப்பவுமே காரசாரமா சிக்கன் கிரேவி சிக்கன் 65 சிக்கன் வைத்து சிக்கன் பிரியாணி தான் செஞ்சிருப்போம் ஆனால் இதே மாதிரியே எப்பவும் செஞ்சு போர் அடிக்காம ஒரு தடவை நீங்க சிக்கன் எடுக்கும் போது இந்த மாதிரி ஒரு ரெசிபியை செஞ்சு கொடுங்க உங்க வீட்ல இருக்கிற எல்லாருமே ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.

Advertisement

வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் நீங்க இந்த சூப்பரான ஒரு ரெசிபியை செஞ்சு கொடுங்க கண்டிப்பா சாப்பிட்டு உங்களை பாராட்டிட்டு தான் போவாங்க. ஒரு சில பேருக்கு சிக்கன்ல நிறைய மசாலா போட்டு செய்வது சுத்தமா பிடிக்காது அப்போ அவங்க எல்லாரும் இந்த மாதிரி ஒரு முறையில செஞ்சு பாருங்க ஒரு தடவை நீங்க செஞ்சுட்டாலே அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் உங்க நாக்கிலேயே ஓட்டுகிடும். ஒரு ரிச்சான டேஸ்ட்ல முந்திரிப்பருப்பு எல்லாம் போட்டு செய்றதால சாப்பிடுவதற்கே அவ்வளவு ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான அட்டகாசமான ஹோட்டலில் கிடைக்கிற மாதிரியே இருக்கக்கூடிய சிக்கன் ஃபிரிக்காசி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சிக்கன் ஃபிரிக்காசி | Chicken Fricassee Recipe In Tamil

Print Recipe
சிக்கன் ஃபிரிக்காசி அப்படின்னா என்னன்னு ஒரே குழப்பமா இருக்கா ஒயிட் சிக்கன் தான் இந்த மாதிரி சொல்றோம் இதோட டேஸ்ட் ஒயிட் சாஸ் பாஸ்தா மாதிரியே இருக்கும். ஒயிட் சாஸ் பாஸ்தா ரொம்ப ரொம்ப பிடிக்கும் அப்படின்னா கண்டிப்பா இந்த ரெசிபியும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். முக்கியமாக குழந்தைகள் எல்லாருமே இதை விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைங்க மட்டுமில்லாமல் பெரியவங்களும் கூட இந்த ரெசிபி ஏன் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. நம்ம சிக்கன் எடுத்தா
Advertisement
எப்பவுமே காரசாரமா சிக்கன் கிரேவி சிக்கன் 65 சிக்கன் வைத்து சிக்கன் பிரியாணி தான் செஞ்சிருப்போம் ஆனால் இதே மாதிரியே எப்பவும் செஞ்சு போர் அடிக்காம ஒரு தடவை நீங்க சிக்கன் எடுக்கும் போது இந்த மாதிரி ஒரு ரெசிபியை செஞ்சு கொடுங்க.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Chicken Fricassee
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 93

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
    Advertisement

Ingredients

  • 4 சிக்கன் லெக் பீஸ்
  • 5 பல் பூண்டு
  • 2 டேபிள் ஸ்பூன் பட்டர்
  • 1 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  • 1 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 20 முந்திரி பருப்பு
  • 2 பெரிய வெங்காயம்
  • 5 காளான்
  • 1 டீஸ்பூன் ஆரிகானோ
  • உப்பு தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ்

Instructions

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அரைமணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
  • ஒரு கடாயில் பட்டர் சேர்த்து சிக்கன் லெக் பீஸ் சேர்த்து ஐந்து நிமிடத்திற்கு இரு பக்கமும் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதே கடாயில் பொடியாக நறுக்கிய பூண்டு, நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய காளான் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு மைதா மாவு சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • சிறிதளவு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து சிக்கனை சேர்த்து ஐந்து நிமிடத்திற்கு நன்றாக வேக வைக்கவும். பின் அந்த சிக்கனை வெளியே எடுத்து விடவும்.
  • 20 முந்திரிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து அதனை கடாயில் சேர்த்து நன்றாக கிளறி கொதித்த உடன் மறுபடியும் சிக்கனை அதில் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
  • அனைத்தும் ஒன்று சேர்ந்து கொஞ்சம் கெட்டியான பிறகு சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து இறக்கினால் சுவையான சிக்கன் ஃபிரிக்காசி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 93kcal | Carbohydrates: 2.79g | Protein: 14g | Fat: 4.8g | Sodium: 73mg | Potassium: 258mg | Vitamin A: 96IU | Vitamin C: 146mg | Calcium: 12mg | Iron: 7.5mg

இதனையும் படியுங்கள் ‌: சுவையான கொங்கு நாட்டு சிக்கன் கிரேவி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!!

Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 28 ஜூன் 2024!

மேஷம் இன்று காதலில் மனவேதனை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இன்று உங்களுக்கு ஒரு கலவையான நாளாக இருக்கும். உங்கள் ரகசியமாக…

23 மணி நேரங்கள் ago

வீடே மணக்கும் சுவையான திண்டுக்கல் ஸ்டைல் குஸ்கா இப்படி செய்து பாருங்கள் இனிமேல் அடிக்கடி செய்வீர்கள்!!!

குஸ்கா என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். அசைவம் சாப்பிடாதவர்கள் கூட இந்த குஸ்காவை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது எல்லாம் வீட்டில்…

2 நாட்கள் ago

தோசை, இட்லிக்கு இப்படி செட்டிநாடு ஸ்டைல் தக்காளி சட்னி செய்து பாருங்கள் இரண்டு அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சமைக்கும் உணவு தான் சட்னி. இதை பெரும்பாலும் நாம் இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன்…

2 நாட்கள் ago

ஜூன் 27 புதன் உதயத்தால் கவலைகளை எதிர்கொள்ளப் போகும் ராசிக்காரர்கள்

மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன் மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு…

2 நாட்கள் ago

பஞ்சாபி ஸ்டைல் தம் ஆலு கிரேவி இப்படி செய்து பாருங்கள் இரண்டு சப்பாத்தி அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…

3 நாட்கள் ago

காலை உணவிற்கு ஏற்ற‌ கொண்டைக்கடலை சாலட் இப்படி செய்து பாருங்கள் ஆரோக்கியமும், சுவையும் நிறைந்திருக்கும்!!!

நம்முடைய உணவுப் பட்டியலில் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கின்ற பொருட்களில் கொண்டக்கடலைக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. கொண்டக்கடலையை வெகு எளிமையாக தயார்…

3 நாட்கள் ago