Advertisement
அசைவம்

ஒரு முறை சிக்கன் வாங்கி இப்படி ருசியான சிக்கன் உப்பு கறி ட்ரை பண்ணி பாருங்க அசத்தலான சுவையில் இருக்கும்!

Advertisement

சிக்கன் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடிக்கும். வார இறுதியில் அசைவம் சாப்பிடாமல், பலருக்கும் கை, கால் ஓடாது. ஒரே மாதிரியான சிக்கன் / மட்டன் கிரேவி, சில்லி, போன்றவைகளை சாப்பிட்டு போரடித்தவர்கள், இந்த சிக்கன் உப்பு கறியை நிச்சயம் முயற்சிக்கலாம். குறைந்த நேரத்தில் எளிய முறையில் செய்யக் கூடிய இந்த சமையல், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் சுவையில் சுண்டி இழுக்கும். இந்த சிக்கனில் ஒரே விதமான உணவுகளை செய்து போர் அடிச்சிடிச்சா ஒரு முறை இந்த சிக்கன் உப்பு கறி ரெசிபியை செய்து பாருங்கள் டேஸ்ட் சும்மா அப்படி இருக்கும்.

இந்த ரெசிபி செய்ய அதிக மசாலா பொருட்கள் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை மிக எளிதாக நமது வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்துவிடலாம். சிக்கனை பயன்படுத்தி நமக்கு பிடித்த பல விதவிதமான ரெசிபிகளை செய்து அசத்த முடியும். அதிலும் முக்கியமாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் விதவிதமான சுவையிலும் விதவிதமான முறையிலும் சிக்கன் சமைக்கப்படுகிறது. என்னதான் வித விதமான உணவுகள் தயாரித்து சாப்பிட்டாலும் முந்தைய காலங்களில் செய்யப்பட்ட உணவுகள் ருசியே தனிதான்.குறிப்பாக ஈரோடு பகுதியில் பெருமளவு வீடுகளிலும் கடைகளிலும் செய்யப்படும் சிக்கன் உப்பு கறி வறுவல். இதற்கு பள்ளிபாளையம் சிக்கன், காட்டு கறி வறுவல், உப்பு கறி, வறுவல் என்ற வேறுசில பெயர்களும் உண்டு.

Advertisement

சிக்கன் உப்பு கறி ஒரு அற்புதமான சைடு டிஷ் மற்றும் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது. அதோடு வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையைக் கொண்டது. இந்த சிக்கன் உப்பு கறி சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் சுலபமான செய்முறையைக் கொண்டது. முக்கியமாக மழைக்காலங்களில் இந்த சிக்கன் உப்பு கறி சாப்பிடுவது அற்புதமான ஒரு அனுபவத்தை கொடுக்கும்.

சிக்கன் உப்பு கறி | Chicken Uppu Kari Recipe In Tamil

Print Recipe
சிக்கன் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடிக்கும். வார இறுதியில் அசைவம் சாப்பிடாமல்,
Advertisement
பலருக்கும் கை, கால் ஓடாது. ஒரே மாதிரியான சிக்கன் / மட்டன் கிரேவி, சில்லி, போன்றவைகளை சாப்பிட்டு போரடித்தவர்கள், இந்த சிக்கன் உப்பு கறியை நிச்சயம் முயற்சிக்கலாம். குறைந்த நேரத்தில் எளிய முறையில் செய்யக் கூடிய இந்த சமையல், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் சுவையில் சுண்டி இழுக்கும். இந்த சிக்கனில் ஒரே விதமான உணவுகளை செய்து போர் அடிச்சிடிச்சா ஒரு முறை இந்த சிக்கன் உப்பு கறி ரெசிபியை செய்து பாருங்கள் டேஸ்ட்
Advertisement
சும்மா அப்படி இருக்கும். இந்த ரெசிபி செய்ய அதிக மசாலா பொருட்கள் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை மிக எளிதாக நமது வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்துவிடலாம்.
Course LUNCH
Cuisine Indian
Keyword Chicken Uppu Kari
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 99

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 1/2 கி சிக்கன்
  • 10 சின்ன வெங்காயம்
  • 15 வர ‌மிளகாய்
  • 10 பல் பூண்டு
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கல் உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 3 டீஸ்பூன் மிளகு தூள்
  • 2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்

Instructions

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம், பூண்டை தோலுடன் நறுக்கி சேர்த்து நன்கு வதக்கி, சிக்கனை சேர்த்து வதக்கவும்.
  • சிக்கன் நன்கு வதங்கியவுடன் அதில் மிளகாய்த்தூள், சீரகத்தூள் மற்றும் மிளகு பொடி சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான சிக்கன் உப்பு கறி தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 99kcal | Carbohydrates: 13.9g | Protein: 3.49g | Fat: 2.79g | Sodium: 54.8mg | Potassium: 77.9mg | Vitamin A: 295IU | Vitamin C: 606mg | Calcium: 24.71mg | Iron: 3.29mg

இதனையும் படியுங்கள் : இந்த சண்டே ஸ்பெஷலாக ருசியான சிக்கன் ரோல் வீட்டிலயே இதே போல செஞ்சி பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

15 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

21 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago