நாவை சுண்டி இழுக்கும் பள்ளிப்பாளையம் சிக்கன் வறுவல் இப்படி செய்து பாருங்கள்!!

சிக்கன் உணவு வகைகளிலே அனைவரும் விரும்பி சாப்பிடுவது வறுவல் தான். அதுவும் காரசாரமான சிக்கன் வறுவல் என்றால் கேக்கவா வேண்டும். அதேபோல் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றார் போல் உணவுகளை சமைக்கும் முறைகள் மாறுபடும். அதுவும் கிராமங்களில் பாரம்பரியமாக செய்யப்படும் சுவையான உணவுகளுக்கு இணையே இல்ல

By Prem Kumar · 24/8/2024

சிக்கன் உணவு வகைகளிலே அனைவரும் விரும்பி சாப்பிடுவது வறுவல் தான். அதுவும் காரசாரமான சிக்கன் வறுவல் என்றால் கேக்கவா வேண்டும். அதேபோல் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றார் போல் உணவுகளை சமைக்கும் முறைகள் மாறுபடும். அதுவும் கிராமங்களில் பாரம்பரியமாக செய்யப்படும் சுவையான உணவுகளுக்கு இணையே இல்லை. அதன்படி இன்று இங்கே நாம் பார்க்கப்போகும் ரெசிபியானது காரசாரமாக பள்ளிபாளையத்தில் செய்யப்படும் கோழி வறுவலை எளிதான செய்முறையில் எப்படி சமைக்கலாம் என்று தான். தமிழகத்தில் தொன்று தொட்டு பண்பாடு, நாகரிகம் அடிப்படையில் சமையல் மரபு மாறுபடுகிறது.

தென் தமிழகத்தில் செட்டிநாடு சமையல் எந்தளவிற்கு பிரபலமோ அதே அளவிற்கு கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் பகுதிகளில் கொங்குநாட்டு சமையல் பிரபலம். அந்த வகையில் கொங்குநாட்டு பள்ளிபாளையம் சிக்கன் வறுவல் செய்முறையை பார்க்கலாம். நீங்கள் இன்று மதியம் சிக்கன் செய்ய நினைத்தால், பள்ளிப்பாளையம் சிக்கன் வறுவல் செய்யுங்கள். இந்த சிக்கன் வறுவல் சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் சுலபமான செய்முறையைக் கொண்டது. இது ரசம் சாதம், நெய் சோறு, பிரியாணி, சப்பாத்தி, தோசை, ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். முக்கியமாக மழைக்காலங்களில் இந்த பள்ளிப்பாளையம் சிக்கன் வறுவல் சாப்பிடுவது அற்புதமான ஒரு அனுபவத்தை கொடுக்கும்.

இதனையும் படியுங்கள் : பத்தே நிமிடத்தில் சுவையான சிக்கன் முட்டை பொடிமாஸ் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!!

Recipes AMP · Quick view
View full