- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, LUNCH
சிக்கன் பொடிமாஸ் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு என்றால் அது மிகை அல்ல. பொடிமாஸ்களில் பல வகை உண்டு. குறிப்பாக அதில் முட்டை பொடிமாஸ், குடை மிளகாய் முட்டை பொடிமாஸ், உருளைக்கிழங்கு பொடிமாஸ், மற்றும் பீன்ஸ் பொடிமாஸ் குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது அசத்தலான சிக்கன் முட்டை பொடிமாஸ். இந்த பொடிமாஸின் ஸ்பெஷல் என்னவென்றால் சிக்கனை நாம் நறுக்கி வைத்தால் போதும் 10 நிமிடத்தில் இதை தயார் செய்து விடலாம். பொதுவாகவே சிக்கன் கொண்டு செய்யப்படும் அனைத்து விதமான உணவுகளுக்குமே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மத்தியிலும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு.
உங்களுக்கு சிக்கன் கொண்டு வறுவல், பொரியல், மசாலா என்று செய்து போர் அடித்திருந்தால், அதனைக் கொண்டு பொடிமாஸ் செய்து சுவைத்துப் பாருங்கள். இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், புதினா புலாவ், கொத்தமல்லி புலாவ், போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதோடு இதை செய்வதும் மிகவும் சுலபம். இந்த சூப்பர் சிக்கன் முட்டை பொடிமாஸ், பேச்சுலர்ஸ் கூட சுலபமா செஞ்சிடலாம், செய்யும்போதே வாசனை பசியைத் தூண்டும். சிக்கன் குழம்பு , சிக்கன் வறுவல் என சமைப்பதை விட வித்தியாசமாக டிரையான ஸ்பைஸஸ் நிறைந்த சுவையில் இந்த சிக்கனை பொடிமாஸ் செய்து சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும். இதை எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான கருணைக்கிழங்கு பொடிமாஸ் இப்படி செய்து பாருங்கள் இதன் சுவை அசைவத்தையே மிஞ்சி விடும் அளவிற்கு இருக்கும்!!!
Ingredients
Method
முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து விட்டு ஒரு குக்கரில் சேர்த்து வேகவைத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் சிக்கன் வேகவைத்த தண்ணீரை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.
பின் சிக்கனை பொடித்து சேர்த்து நன்கு கலந்து விடவும். அதன்பிறகு சிக்கனை கடாயில் ஒரு ஓரமாக வைத்து விட்டு நடுவில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான சிக்கன் முட்டை பொடிமாஸ் தயார்.






