காரசாரமான கருணைக்கிழங்கு பொடிமாஸ் இப்படி செய்து பாருங்கள் இதன் சுவை அசைவத்தையே மிஞ்சி விடும் அளவிற்கு இருக்கும்!!!

- Advertisement -

இந்த காய்கறி வகைகளிலே கிழங்கு வகைகள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக திகழ்கிறது. நாம் அன்றாடம் சமைத்து உண்ணும் பொரியல்களில் கிழங்கும் வகைகளும் இடம் பெற்றுள்ள ஒன்று. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பல இல்லங்களில் மற்ற காய்கறிகளை விரும்பி உண்கிறார்களோ இல்லையோ கிழங்கு வகைகளை கட்டாயம் விரும்பி உண்பார்கள். அந்த வகையில் இந்த பதிவில் கருணைக்கிழங்கு பொடிமாஸ் எப்படி செய்வதென்று பார்க்கலாம். இந்த கிழங்கு வகை ஒரு விதமான நாக்கு அரிப்பு தன்மையை ஏற்படுத்தும் என்பதால் யாரும் இதனை நெருங்குவது இல்லை ஆனால் இதன் சுவையை மிஞ்சிய ஒரு கிழங்கு இருக்கவே முடியாது.

-விளம்பரம்-

கருணைக்கிழங்கை இந்த மாதிரி பொடிமாஸ் செஞ்சு பாருங்க அரிக்கவும் செய்யாது, சுவையும் அட்டகாசமாக இருக்கும். கருணைக்கிழங்கில் இப்படி பொடிமாஸ் செய்து கொடுத்தால் இன்னும் கொஞ்சம் சாப்பாடு போடுங்க என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ருசியாக இருக்கப் போகிறது. கருணைக்கிழங்கு மருத்துவ குணம் நிறைந்தது. இது மூல நோய்க்கு மருந்தாக உள்ளது. இதனை குழம்பு செய்து சாப்பிடுவதன் மூலம் மூலநோய் விரைவில் குணமாகும்.

- Advertisement -

இப்படி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இதை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். உங்களுக்கு கருணைக்கிழங்கை கொண்டு வறுவல், பொரியல், மசாலா என்று செய்து போர் அடித்திருந்தால், அதனைக் கொண்டு பொடிமாஸ் செய்து சுவைத்துப் பாருங்கள். இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், புதினா புலாவ், கொத்தமல்லி புலாவ், போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதோடு இதை செய்வதும் மிகவும் சுலபம்.

Print
3.67 from 3 votes

கருணைக்கிழங்கு பொடிமாஸ் | Yam Podimas Recipe In Tamil

இந்த காய்கறி வகைகளிலே கிழங்கு வகைகள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக திகழ்கிறது. நாம் அன்றாடம் சமைத்து உண்ணும் பொரியல்களில் கிழங்கும் வகைகளும் இடம் பெற்றுள்ள ஒன்று. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பல இல்லங்களில் மற்ற காய்கறிகளை விரும்பி உண்கிறார்களோ இல்லையோ கிழங்கு வகைகளை கட்டாயம் விரும்பி உண்பார்கள். அந்த வகையில் இந்த பதிவில் கருணைக்கிழங்கு பொடிமாஸ் எப்படி செய்வதென்று பார்க்கலாம். இந்த கிழங்கு வகை ஒரு விதமான நாக்கு அரிப்பு தன்மையை ஏற்படுத்தும் என்பதால் யாரும் இதனை நெருங்குவது இல்லை ஆனால் இதன் சுவையை மிஞ்சிய ஒரு கிழங்கு இருக்கவே முடியாது. கருணைக்கிழங்கை இந்த மாதிரி பொடிமாஸ் செஞ்சு பாருங்க அரிக்கவும் செய்யாது, சுவையும் அட்டகாசமாக இருக்கும்.
Prep Time5 minutes
Active Time15 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Yam Podimas
Yield: 4 People
Calories: 135kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/4 கி கருணைக்கிழங்கு
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 2 பெரிய வெங்காயம்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்

செய்முறை

  • முதலில் கருணைக்கிழங்கை நன்கு கழுவி விட்டு தோலை நீக்கி கேரட் துருவலில் துருவி வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் துருவிய கருணைக்கிழங்கை சேர்த்து கை விடாமல் சிறிது நேரம் நன்கு வதக்கவும்.
  • பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் வதங்கியதும். பின் இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கருணைக்கிழங்கு பொடிமாஸ் தயார். இது சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 350g | Calories: 135kcal | Carbohydrates: 3.8g | Protein: 14g | Fat: 2.4g | Sodium: 128mg | Potassium: 294mg | Fiber: 4.9g | Vitamin A: 48IU | Vitamin C: 197mg | Calcium: 15mg | Iron: 7.1mg

இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் கருணைக்கிழங்கு குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!