Home சைவம் ஆந்திரா ஸ்டைல் கருணைக்கிழங்கு குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

ஆந்திரா ஸ்டைல் கருணைக்கிழங்கு குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

தென்னிந்திய சமையல்களில் குழும்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. ஏனென்றால், ஒரு குழம்பில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக சாம்பாரில் பருப்பு சாம்பார், முருங்கை சாம்பார், முள்ளங்கி சாம்பார் என பல வகைகள் உள்ளன. இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இவை ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான சுவையும், ருசியும் உண்டு. நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த ஆந்திரா கருணைக்கிழங்கு குழம்பு. இது பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு. மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். அவற்றை தயார் செய்வது சில சமயத்தில் கடினம் போன்று தோன்றும். ஆனால் அது ரொம்பவும் ஈஸி ஆகும்.

-விளம்பரம்-

அந்த வகையில், சுவையான ஆந்திரா ஸ்டைல் கருணைக்கிழங்கு குழம்பு செய்வதற்கான சுலபமான செய்முறையை இங்கு பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் மதிய சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஒவ்வொரு விதமான குழம்பு வைக்கப்படுகிறது. பெரும்பாலும் ரசம், சாம்பார், கீரை, புளி குழம்பு, குருமா இதுபோன்ற குழம்பு வகைகள் தான் மாறிமாறி செய்யப்படுகிறது. இவற்றை சற்று வித்தியாசமான சுவையில் செய்ய வேண்டும் என்றால் ஆந்திரா ஸ்டைலில் குழம்பு செய்து கொடுக்கலாம். சிலருக்கு கருணைக்கிழங்கு மிகவும் பிடிக்கும். அதிலும் அதனை புளிக்குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் சிலருக்கு கருணைக்கிழங்கில் எப்படி ஆந்திரா ஸ்டைலில் குழம்பு எப்படி சமைப்பதென்று தெரியாது. அத்தகையவர்களுக்கு இந்த கருணைக்கிழங்கு குழம்பு ரெசிபி. கருணைக்கிழங்கில் பொரியல், வறுவல் செய்து இருப்போம்.

இன்று கருணைக்கிழங்கை வைத்து காரசாரமான ஆந்திரா ஸ்டைல் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். கருணைக்கிழங்கு மருத்துவ குணம் நிறைந்தது. இது மூல நோய்க்கு மருந்தாக உள்ளது. இதனை குழம்பு செய்து சாப்பிடுவதன் மூலம் மூலநோய் விரைவில் குணமாகும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் இதனை சமைத்துக் கொடுக்கலாம். புளிப்பு மற்றும் காரமான சுவையில் கருணைக்கிழங்கை கொண்டு குழம்பு வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். இப்படி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இதை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

-விளம்பரம்-
Print
No ratings yet

ஆந்திரா கருணைக்கிழங்கு குழம்பு | Andhra Karunaikilangu Curry Recipe In Tamil

தென்னிந்திய சமையல்களில் குழும்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. ஏனென்றால், ஒரு குழம்பில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக சாம்பாரில் பருப்பு சாம்பார், முருங்கை சாம்பார், முள்ளங்கி சாம்பார் என பல வகைகள் உள்ளன. இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இவை ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான சுவையும், ருசியும் உண்டு. நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த ஆந்திரா கருணைக்கிழங்கு குழம்பு. இது பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு. மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். அவற்றை தயார் செய்வது சில சமயத்தில் கடினம் போன்று தோன்றும். ஆனால் அது ரொம்பவும் ஈஸி ஆகும். அந்த வகையில், சுவையான ஆந்திரா ஸ்டைல் கருணைக்கிழங்கு குழம்பு செய்வதற்கான சுலபமான செய்முறையை இங்கு பார்க்கலாம்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Andhra Karunaikilangu Curry
Yield: 4 People
Calories: 71kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 6 கருணைக்கிழங்கு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 5 பல் பூண்டு
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • உப்பு தேவையான அளவு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 கப் புளி கரைசல்

செய்முறை

  • முதலில் கருணைக்கிழங்கை நன்கு கழுவி குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் இதனை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  • பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி இதனுடன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
  • அதன்பிறகு கிழங்கை சேர்த்து கலந்து புளிக் கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • தண்ணீர் நன்கு சுண்டி எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான ஆந்திரா ஸ்டைல் கருணைக்கிழங்கு குழம்பு தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 71kcal | Carbohydrates: 6.4g | Protein: 3.5g | Fat: 2.4g | Sodium: 8mg | Potassium: 29mg | Fiber: 4.1g | Vitamin A: 45IU | Vitamin C: 37mg | Calcium: 12mg | Iron: 7.5mg

இதனையும் படியுங்கள் : மதுரை ஸ்டைலில் ருசியான கருணைக்கிழங்கு மசியல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! சுட சுட சேறுடன் சாப்பிட அருமையாக இருக்கும்!