மதுரை ஸ்டைலில் ருசியான கருணைக்கிழங்கு மசியல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! சுட சுட சேறுடன் சாப்பிட அருமையாக இருக்கும்!

- Advertisement -

நம்ம எப்பவுமே ரொம்ப சிம்பிளா செய்யுற சாதத்துக்கு நிறைய மசாலா எல்லாம் போட்டு சூப்பரா ஒரு சைடு டிஷ் இருந்தா செமையா இருக்கும்ன்னு எதிர்பார்ப்போம். அந்த வகையில எப்பவுமே காரசாரமா சாப்பிடுற மதுரையில செய்யக்கூடிய ஒரு அட்டகாசமான கருணை கிழங்கு மசியல் இப்ப பாக்க போறோம். எப்ப பாத்தாலும் உருளைக்கிழங்கு மசியல் தான் நம்ம வீட்ல செய்வோம் ஆனா ஒரு தடவை கருணைக்கிழங்கு மசியல் செஞ்சு பாருங்க உங்களுக்கே அந்த டேஸ்ட் ரொம்ப புடிச்சு போயிடும்.

-விளம்பரம்-

பெரும்பாலும் கருணைக்கிழங்கு வச்சு நம்ம ரோஸ்ட் செய்வோம் அப்படி இல்லன்னா கருணைக்கிழங்கு கார குழம்பு செய்வோம் ஆனா பெரும்பாலும் கருணைக்கிழங்கு மசியல் செய்ய மாட்டோம் உங்க வீட்ல ரசம் சாதம் தயிர் சாதம் ரொம்பவே சிம்பிளா வைக்கக்கூடிய சாதனங்களுக்கு இந்த கருணைக்கிழங்கு மசியல் வச்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் ரொம்ப அட்டகாசமா இருக்கும். உங்க வீட்ல இருக்கா பெரியவங்களும் சின்ன குழந்தைகளும் ஒரு தடவை நீங்க செஞ்சு கொடுக்குற இந்த கருணைக்கிழங்கு மசிகளை சாப்பிட்டுட்டாங்கனா போதும் அதுக்கப்புறம் மறுபடியும் கேட்டுக்கொண்டே தான் இருப்பாங்க அந்த அளவுக்கு ருசியானது தான் இந்த கருணைக்கிழங்கு மசியல்.

- Advertisement -

சளி புடிச்சிட்டு தொண்டலாம் கட்டி போய் தொண்டை வலி வந்து இருக்கிறவங்களுக்கு காரசாரமா இந்த கருணைக்கிழங்கு மசியல் வச்சு கொடுத்தீங்கன்னா அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அவங்களுக்கு சாப்பிடறதுக்கும் வாய்க்கு ருசியா  தொண்டைக்கும் இதமா இருக்கும். நல்லா சூடான சாதம் ரசம் ஊத்தி இந்த கருணைக்கிழங்கு மசாலா வைத்து கொடுத்தால் போதும் அவங்களுக்கு இருமல் சளி காய்ச்சல் எல்லாம் பறந்து போய்விடும். இப்ப வாங்க இந்த சூப்பரான மதுரை ஸ்பெஷல் கருணைக்கிழங்கு மசியல் காரசாரமா எப்படி வைக்கிறது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

கருணைக்கிழங்கு மசியல் | Elephant Yam Masiyal In Tamil

கருணைக்கிழங்கு வச்சு நம்ம ரோஸ்ட் செய்வோம் அப்படிஇல்லன்னா கருணைக்கிழங்கு கார குழம்பு செய்வோம் ஆனா பெரும்பாலும் கருணைக்கிழங்கு மசியல்செய்ய மாட்டோம் உங்க வீட்ல ரசம் சாதம் தயிர் சாதம் ரொம்பவே சிம்பிளா வைக்கக்கூடிய சாதனங்களுக்குஇந்த கருணைக்கிழங்கு மசியல் வச்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் ரொம்ப அட்டகாசமா இருக்கும்.உங்க வீட்ல இருக்கா பெரியவங்களும் சின்ன குழந்தைகளும் ஒரு தடவை நீங்க செஞ்சு கொடுக்குறஇந்த கருணைக்கிழங்கு மசிகளை சாப்பிட்டுட்டாங்கனா போதும் அதுக்கப்புறம் மறுபடியும் கேட்டுக்கொண்டேதான் இருப்பாங்க அந்த அளவுக்கு ருசியானது தான் இந்த கருணைக்கிழங்கு மசியல்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Elephant Yam Masiyal
Yield: 4
Calories: 112kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 கருணைக்கிழங்கு
  • 2 தக்காளி
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • ஒரு குக்கரில் கருணைக்கிழங்கை சேர்த்து கூடவே சிறிதளவு உப்பு சேர்த்து மூன்று விசில் விட்டு இறக்கவும்.கருணைக்கிழங்கு நன்றாக வெந்தவுடன் அதனை மசித்து வைத்துக் கொள்ளவும்
     
  • தக்காளி மற்றும்பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்
  • பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி இலைகள் மற்றும் இஞ்சி அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாகஅரைத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொள்ளவும் பிறகு அதனுடன்அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் இஞ்சி விழுதை சேர்க்கவும்.
  • சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கிய பிறகு  தக்காளியை சேர்த்து குழைய வதக்க வேண்டும்.
  • இதனுடன் கிழங்கு மசியலை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பிறகு மல்லி தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் அனைத்தும் சேர்த்து நன்றாக கிளறவும். இடையிடையே சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்றாக கிளறவும் அனைத்தும் சேர்ந்து நன்றாக வெந்தவுடன் இறக்கினால் சுவையான கருணைக்கிழங்கு மசியல் தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 112kcal | Carbohydrates: 9g | Fat: 2g | Sugar: 1g

இதையும் படியுங்கள் : சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான கருணைக்கிழங்கு கார குழம்பு இப்படி செஞ்சி கொடுங்க! அசத்தலான ருசியில் இருக்கும்!