முலாம்பழம் வச்சு சர்பத்தா அப்படின்னு யோசிக்கிறீங்களா! ஆமாங்க முலாம் பழம் வச்சு சூப்பரான இதுவரைக்கும் நீங்க சாப்பிடாத ஒரு சுவைல சர்பத் செய்யலாம். பொதுவா வேணுமே இந்த முலாம் பழத்தை அப்படியே சாப்பிட்டாலும் இல்ல ஜூஸா போட்டு குடிச்சாலும் அதன் மூலமாக நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இந்த வெயில் காலத்துல அதிக உடல் சூட்டால தவிக்கிறவங்களுக்கு இந்த முலாம்பழ சர்பத் ரொம்பவே உதவியா இருக்கும்.
இந்த முலாம் பழத்துல நீங்க சர்பத் போட்டு குடிக்கும்போது உங்களுக்கு தொண்டைக்கு இதமா வயிறு வரைக்கும் சில்லுனு இருக்கும். ஜவ்வரிசி சியா விதைகள் முந்திரி, பாதாம் எல்லாம் சேர்க்கிறதால ரொம்பவே ஒரு ரிச்சான டேஸ்ட்ல குடிக்கிறதுக்கு ரொம்ப சூப்பரா இருக்கும்.
முலாம் பழத்தில் இதுவரைக்கும் நீங்க ஜூஸ் கூட போட்டு குடிச்சது இல்ல அப்படின்னா வெறும் பால் சர்க்கரை முலாம்பழம் இதெல்லாம் செய்து ஜூஸ் மாதிரி அடிச்சு குடுங்க அவ்வளவு சூப்பரா இருக்கும்.
அதே மாதிரி இந்த சூப்பரான சர்பத்தும் ஒரு நாள் குடிச்சு பாருங்க உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். கடைகள்ல கிடைக்கிற அதே மாதிரியான டேஸ்ட்டுல வீட்டிலேயே நம்ம பழங்கள் வச்சு சூப்பரா இந்த மாதிரியான சர்பத் போட்டு குடிச்சுக்கலாம். இப்ப வாங்க இந்த டேஸ்டான ரிச்சான ஆரோக்கியமான முலாம்பழ சர்பத் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
முலாம்பழ சர்பத் | Muskmelon sarbath recipe in Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் முலாம்பழம்
- 1 கப் பால்
- 1 டீஸ்பூன் கஸ்டர்ட் பவுடர்
- 5 முந்திரி
- 5 பாதாம்
- 5 பிஸ்தா
- 1 டேபிள்ஸ்பூன் ஜவ்வரிசி
- 1 டீஸ்பூன் சியா விதைகள்
- 1/4 கப் சர்க்கரை
செய்முறை
- முதலில் ஜவ்வரிசியை 4 மணி நேரம் ஊறவைத்து அதனை வேக வைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- முலாம் பழத்தை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். சியா விதைகளை 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்
- ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து அதனுடன் கஸ்டட் பவுடர் கலந்து அதனை நன்றாக கொதிக்க வைக்கவும் கொதித்ததும்சர்க்கரை சேர்த்து 10 நிமிடங்கள் நன்றாக கலந்து விட்டு கொதிக்கவிட்டு இறக்கி வைக்கவும்
- இப்பொழுது அதனுடன் அரைத்த முலாம்பழம் விழுது பொடித்த பாதாம் முந்திரி பிஸ்தா வேக வைத்த ஜவ்வரிசி ஊற வைத்த சியா விதைகள் அனைத்தையும் சேர்த்து கொள்ளவும்.
- இப்பொழுது இரண்டு மணி நேரம் அதனை பிரிட்ஜுக்குள் வைத்து குளு குளுவென எடுத்து குடித்தால் சுவையான முலாம்பழம் சர்பத் தயார்
Nutrition
இதையும் படியுங்கள் : வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!