- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
சிக்கன் உணவு வகைகளிலே அனைவரும் விரும்பி சாப்பிடுவது வறுவல் தான். அதுவும் காரசாரமான சிக்கன் வறுவல் என்றால் கேக்கவா வேண்டும். அதேபோல் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றார் போல் உணவுகளை சமைக்கும் முறைகள் மாறுபடும். அதுவும் கிராமங்களில் பாரம்பரியமாக செய்யப்படும் சுவையான உணவுகளுக்கு இணையே இல்லை. அதன்படி இன்று இங்கே நாம் பார்க்கப்போகும் ரெசிபியானது காரசாரமாக பள்ளிபாளையத்தில் செய்யப்படும் கோழி வறுவலை எளிதான செய்முறையில் எப்படி சமைக்கலாம் என்று தான். தமிழகத்தில் தொன்று தொட்டு பண்பாடு, நாகரிகம் அடிப்படையில் சமையல் மரபு மாறுபடுகிறது.
தென் தமிழகத்தில் செட்டிநாடு சமையல் எந்தளவிற்கு பிரபலமோ அதே அளவிற்கு கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் பகுதிகளில் கொங்குநாட்டு சமையல் பிரபலம். அந்த வகையில் கொங்குநாட்டு பள்ளிபாளையம் சிக்கன் வறுவல் செய்முறையை பார்க்கலாம். நீங்கள் இன்று மதியம் சிக்கன் செய்ய நினைத்தால், பள்ளிப்பாளையம் சிக்கன் வறுவல் செய்யுங்கள். இந்த சிக்கன் வறுவல் சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் சுலபமான செய்முறையைக் கொண்டது. இது ரசம் சாதம், நெய் சோறு, பிரியாணி, சப்பாத்தி, தோசை, ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். முக்கியமாக மழைக்காலங்களில் இந்த பள்ளிப்பாளையம் சிக்கன் வறுவல் சாப்பிடுவது அற்புதமான ஒரு அனுபவத்தை கொடுக்கும்.
இதனையும் படியுங்கள் : பத்தே நிமிடத்தில் சுவையான சிக்கன் முட்டை பொடிமாஸ் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!!
Ingredients
Method
முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து விட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, சோம்பு, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் வெங்காய விழுது மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து அதனுடன் சிக்கன் மசாலா தூள் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் மிதமான தீயில் வைத்து எண்ணையில் மூடி வைத்து வேக விடவும்.
பின் சிக்கன் வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான பள்ளிப்பாளையம் சிக்கன் வறுவல் தயார்.






