Home சைவம் வீடே மணக்கும் ருசியான தேங்காய் பால் ரசம் இப்படி வீட்டில் எளிதாக தயார் செய்யலாம்!!!

வீடே மணக்கும் ருசியான தேங்காய் பால் ரசம் இப்படி வீட்டில் எளிதாக தயார் செய்யலாம்!!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற குழம்பு வகைகளில் இந்த ரசத்திற்கு எப்போதுமே முதலிடம் தான். அது மட்டுமின்றி, உடல்நிலை சரியில்லாத நேரத்தில் இந்த ரசம் சேர்த்து சாப்பிடும் போது உடல் சோர்வை கூட நீக்கி சுறுசுறுப்பை தரும். தேங்காய் பால் ரசம் வைத்தால் அவ்வளவு சுவையாக இருக்கும். அதே மாதிரி நாமும் வீட்டில் ட்ரை பண்ணலாம் என்றால், அந்த அளவிற்கு நமக்கு சுவை வராது. மணக்க மணக்க சூப்பரான தேங்காய் பால் ரசம் , நம்முடைய வீட்டிலும் தயார் செய்யலாம் .

-விளம்பரம்-

 தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், எலும்புகளை வலுமைப்படுத்தும் இது போன்ற உடலுறுப்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும். நோய்களை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் தேங்காய் பாலில் மாங்கனீஸ் சத்துக்கள், செலினியம், கால்சியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ரசத்தை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையில் கொஞ்சம் தேங்காய் பால் சேர்த்து எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Print
No ratings yet

தேங்காய் பால் ரசம் | Coconut Milk Rasam Recipe In Tamil

மணக்க மணக்க சூப்பரான தேங்காய்பால் ரசம் , நம்முடைய வீட்டிலும் தயார் செய்யலாம் . தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உடலில்நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், எலும்புகளை வலுமைப்படுத்தும் இது போன்ற உடலுறுப்புகளைபாதுகாப்பாக வைத்திருக்கும். நோய்களை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் தேங்காய்பாலில் மாங்கனீஸ் சத்துக்கள், செலினியம், கால்சியம் போன்ற ஏராளமானசத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ரசத்தை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில்சுவையில் கொஞ்சம் தேங்காய் பால் சேர்த்து எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்வாங்க.
Prep Time2 minutes
Active Time5 minutes
Course: Rasam
Cuisine: tamilnadu
Keyword: coconut milk rasam
Yield: 4
Calories: 115kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் தேங்காய் துருவல்
  • 25 சின்ன வெங்காயம்
  • சிறிய புளி எலுமிச்சைஅளவு
  • 1 தேக்கரண்டி வெந்தயம்
  • 4 மிளகாய் வற்றல்
  • 1 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 தேக்கரண்டி கல் உப்பு

செய்முறை

  • தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்து கரைத்துஒரு கப் அளவிற்கு புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றலை போட்டு 30 நொடி வறுத்துக் கொள்ளவும்.
  • அதனுடன் வெந்தயம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு 2 நிமிடம் வதக்கவும். 5. வெங்காயம் வதங்கியதும் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைச்சல் ஊற்றி ஒரு கொதி வந்ததும், உப்பு போட்டு கலக்கி விடவும்.
  • பிறகு ஒரு தட்டை போட்டு மூடி வைத்து புளி வாசனை போகும் வரை 5 நிமிடம் கொதிக்க விடவும். புளித்தண்ணீர்கொதிக்கும் நேரத்தில் துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பிழிந்து 1 1/2 கப் அளவு பால் எடுக்கவும். பிழிந்து எடுத்த பாலை சக்கையில்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • 5 நிமிடம்கொதித்த பிறகு திறந்து தயாராக எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி கொதி வரும் முன் இறக்கி விடவும். அதிகம் கொதிக்க விடக் கூடாது. பால் திரிந்து விடும்.  சுவையானதேங்காய் பால் ரசம் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 115kcal | Carbohydrates: 33g | Protein: 7g | Sodium: 76mg