சப்பாத்தி, பூரி போன்றவற்றிக்கு ஏற்ற கொத்தமல்லி உருளைக்கிழங்கு மசாலா இப்படி செய்து பாருங்கள்!!!

பூரி என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம். தென்னிந்திய உணவுகளில் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. பூரி என்றாலே நம் நினைவிற்கு வருவது உருளைக்கிழங்கு மசாலா தான். பெரும்பாலான குழந்தைகள் ஹோட்டல் மெனு கார்டை பார்த்ததும் விரும்பி அதிகம் ஆர்டர் செய்யும் உணவாக பூரி மசாலா கிழங்

By Prem Kumar · 28/7/2025

பூரி என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம். தென்னிந்திய உணவுகளில் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. பூரி என்றாலே நம் நினைவிற்கு வருவது உருளைக்கிழங்கு மசாலா தான். பெரும்பாலான குழந்தைகள் ஹோட்டல் மெனு கார்டை பார்த்ததும் விரும்பி அதிகம் ஆர்டர் செய்யும் உணவாக பூரி மசாலா கிழங்கு உள்ளது. குழந்தைகள் மட்டுமில்லை இந்த லிஸ்டில் பெரியவர்களும் உண்டு. ஃபுன்னு பொங்கி சுடச்சுட வரும் பூரியுடன் மசாலா கிழங்கை வைத்து சாப்பிடும் ருசியே அலாதியானது. பூரி பொதுவாக சென்னா மசாலா, வெஜிடபிள் குருமா, காலிபிளவர் குருமா, மற்றும் கொத்துக்கறி போன்ற சைடிஷ்களுடன் தான் பரிமாறப்படுகிறது. என்ன தான் இது போன்று வித விதமான சைடிஷ்கள் இருந்தாலும் உருளைக்கிழங்கு மசாலா காம்பினேஷன்க்கு கிடைக்கும் வரவேற்பே தனி தான்.

அனால் கொத்தமல்லியில் உருளைக்கிழங்கு மசாலா செய்து சாப்பிட்டிருக்கீங்களா? ட்ரைப் பண்ணி பாருங்க, அசத்தலாக இருக்கும்! இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் நீங்கள் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். நீங்களும் வார‌ இறுதியில் பூரி செய்ய நினைத்தால், கொத்தமல்லி அரைத்து விட்ட இந்த கொத்தமல்லி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்கள். இந்த கொத்தமல்லி உருளைக்கிழங்கு மசாலா சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த உருளைக்கிழங்கு மசாலா செய்வது மிகவும் சுலபம். மேலும் இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : பூரிக்கு இந்த மாதிரி சென்னா மசாலா செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

Recipes AMP · Quick view
View full