- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
பூரி என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம். தென்னிந்திய உணவுகளில் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. பூரி என்றாலே நம் நினைவிற்கு வருவது உருளைக்கிழங்கு மசாலா தான். பெரும்பாலான குழந்தைகள் ஹோட்டல் மெனு கார்டை பார்த்ததும் விரும்பி அதிகம் ஆர்டர் செய்யும் உணவாக பூரி மசாலா கிழங்கு உள்ளது. குழந்தைகள் மட்டுமில்லை இந்த லிஸ்டில் பெரியவர்களும் உண்டு. ஃபுன்னு பொங்கி சுடச்சுட வரும் பூரியுடன் மசாலா கிழங்கை வைத்து சாப்பிடும் ருசியே அலாதியானது. பூரி பொதுவாக சென்னா மசாலா, வெஜிடபிள் குருமா, காலிபிளவர் குருமா, மற்றும் கொத்துக்கறி போன்ற சைடிஷ்களுடன் தான் பரிமாறப்படுகிறது. என்ன தான் இது போன்று வித விதமான சைடிஷ்கள் இருந்தாலும் உருளைக்கிழங்கு மசாலா காம்பினேஷன்க்கு கிடைக்கும் வரவேற்பே தனி தான்.
அனால் கொத்தமல்லியில் உருளைக்கிழங்கு மசாலா செய்து சாப்பிட்டிருக்கீங்களா? ட்ரைப் பண்ணி பாருங்க, அசத்தலாக இருக்கும்! இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் நீங்கள் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். நீங்களும் வார இறுதியில் பூரி செய்ய நினைத்தால், கொத்தமல்லி அரைத்து விட்ட இந்த கொத்தமல்லி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்கள். இந்த கொத்தமல்லி உருளைக்கிழங்கு மசாலா சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த உருளைக்கிழங்கு மசாலா செய்வது மிகவும் சுலபம். மேலும் இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : பூரிக்கு இந்த மாதிரி சென்னா மசாலா செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
Ingredients
Method
முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பட்டை, இலவங்கம், ஏலக்காய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் நாம் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பிறகு பச்சை மிளகாய், வெங்காயம், கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள், தக்காளி, உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து கொதிக்க விடவும்.
பின் பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு இரண்டையும் தண்ணீரில் நன்கு கரைத்து இதில் ஊற்றி கலந்து விடவும்.
பின் இந்த உருளைக்கிழங்கு மசாலா சிறிது கெட்டியானதும் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கொத்தமல்லி உருளைக்கிழங்கு மசாலா தயார். இது பூரி, சப்பாத்தி, தோசை ஆகியவற்றிற்கு சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.






