Home சைவம் பூரிக்கு இந்த மாதிரி சென்னா மசாலா செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

பூரிக்கு இந்த மாதிரி சென்னா மசாலா செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

பூரிக்கு சப்பாத்திக்கு இட்லி தோசைக்கு சாதத்துக்கு எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட் காம்பினேஷனா இருக்கக்கூடிய ஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா வீட்டிலேயே எப்படி சூப்பரா செய்வது என்று பார்க்கலாம். இந்த ஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா அப்படியே கடைகளில் கிடைக்கிற மாதிரியான டேஸ்ல கிடைக்கும்.

-விளம்பரம்-

பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா தான் அதிகமா செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் ஒரு தடவை இந்த சின்ன மசாலா செஞ்சு சாப்பிட்டு பாருங்க ரொம்ப ரிச்சான  டேஸ்ட்ல சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும். இந்த சென்னா மசாலாக்கு கருப்பு சுண்டல் வெள்ளை சுண்டல் எதுவேனாலும் சேர்க்கலாம் ஆனா வெள்ளை சுண்டல் சேர்த்தால் இன்னும் டேஸ்ட் சூப்பரா இருக்கும். உங்க வீட்ல இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க இதுக்கு வீட்ல இருக்குற பொருட்களை போதுமானது கடைகளில் போய் வாங்கணும் அப்படி என்று அவசியமே கிடையாது. முந்திரிப் பருப்பு அரைச்சு ஊத்தி எனக்கு நான் ரொம்பவே கெட்டியா ரிச்சான டேஸ்ட்ல சூப்பரா கிடைக்கும்.

இந்த சென்னா மசாலாவை ஒரு தடவை மட்டும் வீட்ல செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி உங்க வீட்ல செஞ்சு தர சொல்லி கேப்பாங்க. அந்த அளவுக்கு செம டேஸ்டா ரிச்சா இருக்கும். எப்பவும் பூரி சப்பாத்திக்கு ஒரே மாதிரியான குருமா செய்யாம இந்த மாதிரி சென்னா மசாலா செஞ்சு சாப்பிடுங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான அட்டகாசமான சென்னா மசாலா வீட்ல எப்படி ஹோட்டல் ஸ்டைல செய்யறதுன்னு பார்க்கலாம்.

Print
1 from 1 vote

சென்னா மசாலா | Channa Masala Recipe In Tamil

பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா தான் அதிகமா செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் ஒரு தடவை இந்தசின்ன மசாலா செஞ்சு சாப்பிட்டு பாருங்க ரொம்ப ரிச்சான  டேஸ்ட்ல சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும்.இந்த சென்னா மசாலாக்கு கருப்பு சுண்டல் வெள்ளை சுண்டல் எதுவேனாலும் சேர்க்கலாம் ஆனாவெள்ளை சுண்டல் சேர்த்தால் இன்னும் டேஸ்ட் சூப்பரா இருக்கும். உங்க வீட்ல இந்த ரெசிபியைசெஞ்சு பாருங்க இதுக்கு வீட்ல இருக்குற பொருட்களை போதுமானது கடைகளில் போய் வாங்கணும்அப்படி என்று அவசியமே கிடையாது. முந்திரிப் பருப்பு அரைச்சு ஊத்தி எனக்கு நான் ரொம்பவேகெட்டியா ரிச்சான டேஸ்ட்ல சூப்பரா கிடைக்கும்.
Prep Time8 hours
Active Time20 minutes
Total Time8 hours 20 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Channa Masala
Yield: 5
Calories: 240kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் வெள்ளை சுண்டல்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 பச்சை மிளகாய்
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா                          
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 6 முந்திரி பருப்பு
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வெள்ளை சுண்டலை 8 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் நான்கு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு சிறிதளவு சோம்பு, கருவேப்பிலை ஏலக்காய் பிரிஞ்சி இலைசேர்த்து தாளித்து கொள்ளவும்
  • பிறகு பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும் இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • அனைத்தும் பச்சை வாசனை போன பிறகு தக்காளியை சேர்த்து குழைவாக வதக்கிக் கொள்ளவும்.மஞ்சள் தூள் கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வேக வைக்கவும்
  • தேங்காய் துருவல் முந்திரிப் பருப்பு சோம்பு சேர்த்து அரைத்து அந்த விழுதையும் குழம்புடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்
  • குழம்பு நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி இலைகளை துபாய் இறக்கினால் சுவையான சென்னா மசாலா தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Cholesterol: 1mg | Potassium: 104mg | Calcium: 13mg

இதையும் படியுங்கள் :ஹோட்டல் ஸ்டைல் கரம் மசாலா தூள்