Home சைவம் ஹோட்டல் ஸ்டைல் கரம் மசாலா தூள்

ஹோட்டல் ஸ்டைல் கரம் மசாலா தூள்

மசாலா பொருட்களுக்கு புகழ் பெற்ற நாடுதான் இந்தியா. இங்கு ஒவ்வொரு வீட்டு சமையல் அறையிலும் பல்வேறு வகையான மசாலா பொருட்களை நாம் பார்க்க முடியும். அப்படி மக்கள் அடிப்படையாகப் பயன்படுத்தும் ஒரு மசாலா தான் கரம் மசாலா தூள். கரம் மசாலா தூளானது பல்வேறு மசாலா பொருட்களின் கலவையாக இருக்கிறது. இதனால் இது சைவம் அசைவம் என அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சுவையை அதிகரிக்க பெரும்பாலான இந்திய சமையல் குறிப்புகளில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மசாலா தூளில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் இந்த மசாலா கலவையின் தனித்துவமான மற்றும் தனிப்பயன் செய்முறையைக் கொண்டுள்ளது. அ

-விளம்பரம்-

ன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் கரம் மசாலாவானது உடலுக்கு நன்மை பயப்பதாய் உள்ளது. ஆனால் கரம் மசாலா நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது என்பது பலர் அறியாத ஒரு விஷயமாகும். செரிமானத்தை மேம்படுத்துவதில் கரம் மசாலா தூள் பல நன்மைகளை செய்கிறது. இது செரிமானத்தை எளிதாக்குகிறது. இந்த மசாலா வயிற்றில் இரைப்பையின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. மேலும் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. செரிமானம் தொடர்பான பிரச்சனைகள், அசிடிட்டி, வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது. இந்த கரம் மசாலாவை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். வீட்டில் தயாரிக்கும் இந்த மசாலாவை நீண்ட நாட்கள் சேமித்தும் வைத்துக் கொள்ளலாம். அது எப்படி தயாரிப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Print
No ratings yet

ஹோட்டல் ஸ்டைல் கரம் மசாலா தூள் | Garam Masala Powder Recipe In Tamil

மசாலா பொருட்களுக்கு புகழ் பெற்ற நாடுதான் இந்தியா. இங்கு ஒவ்வொரு வீட்டு சமையல் அறையிலும் பல்வேறு வகையான மசாலா பொருட்களை நாம் பார்க்க முடியும். அப்படி மக்கள் அடிப்படையாகப் பயன்படுத்தும் ஒரு மசாலா தான் கரம் மசாலா தூள். கரம் மசாலா தூளானது பல்வேறு மசாலா பொருட்களின் கலவையாக இருக்கிறது. இதனால் இது சைவம் அசைவம் என அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சுவையை அதிகரிக்க பெரும்பாலான இந்திய சமையல் குறிப்புகளில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மசாலா தூளில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் இந்த மசாலா கலவையின் தனித்துவமான மற்றும் தனிப்பயன் செய்முறையைக் கொண்டுள்ளது.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: MASALA
Cuisine: Indian
Keyword: Garam Masala Powder
Yield: 3 People
Calories: 94kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/4 கி காய்ந்த மிளகாய்
  • 1/4 கி மல்லி
  • 50 கி சோம்பு
  • 50 கி சீரகம்
  • 25 கி மிளகு
  • 25 கி கசகசா
  • 25 கி வெந்தயம்
  • 10 கி பட்டை
  • 10 கி கிராம்பு
  • 10 கி அன்னாசி பூ
  • 10 கி மராத்தி மொக்கு
  • 10 கி ஜாதிபத்ரி

செய்முறை

  • முதலில் மசாலா பொருட்களை சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் வெறும் வாணலியில் சீரகத்தை சேர்த்து மெல்லிய தீயில் வைத்து நன்றாக மணம் வர வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் மிளகு, மல்லியை சேர்த்து குறைந்த தீயில் கருகாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் சோம்பு, பட்டை, கிராம்பு, ஜாதிபத்ரி, அன்னாச்சி பூ, மராத்தி மொக்கு சேர்த்து வறுத்து எடுக்கவும்.
  • பின் அடுப்பை அணைத்து விட்டு கசகசா சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல் சேர்த்து நிறம் மாறாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் இவை அனைத்தையும் மறுபடியும் வெயிலில் காய வைத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான, ஆரோக்கியமான, மணமான கரம் மசாலா தயார்.

Nutrition

Serving: 700g | Calories: 94kcal | Carbohydrates: 4.9g | Protein: 15g | Fat: 2.5g | Sodium: 17mg | Potassium: 225mg | Fiber: 8g | Vitamin A: 8IU | Vitamin C: 32mg | Calcium: 13mg | Iron: 6mg

இதனையும் படியுங்கள் : ருசியான கேரளா ஸ்டைல் சாம்பார் செய்ய மணமணக்கும் கேரளா ஸ்டைல் சாம்பார் பொடி இப்படி செய்து பாருங்க!