மதிய உணவுக்கு ருசியான கொத்தமல்லி சாதம் இப்படி செஞ்சு பாருங்க! நிறம் மாறாமல் கொத்தமல்லி வாசத்தோடு கமகமவென சூப்பராக இருக்கும்!!

- Advertisement -

பொதுவாக நிறைய பேருக்கு குழம்பு ஊற்றி சாதம் சாப்பிடுவதற்கு பதிலாக கலவை சாதம் மிகவும் பிடிக்கும். பள்ளிக்கூடம் கல்லூரி வேலைக்கு செல்பவர்கள் அனைவருக்கும் கலவை சாதம் தான் மதிய உணவாக கொடுக்கப்படும். வீட்டில் உள்ளவர்களுக்கும் கலவை சாதம் செய்து கொடுப்பதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

-விளம்பரம்-

மேலும் மதியத்திற்கு கலவை சாதம் சாப்பிடும் பொழுது சுவையும் அருமையாக இருக்கும். நமக்கு தெரிந்த கலவை சாதங்கள் பெரும்பாலும் தக்காளி சாதம் லெமன் சாதம் புளி சாதம் தேங்காய் சாதம் இவைகள் தான் ஆனால் கொத்தமல்லி சாதம் பெரும்பான்மையோர் செய்து கொடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் இந்த கொத்தமல்லி சாதம் சுவையும் அருமையாக இருக்கும் அதே நேரத்தில் உடலுக்கு ஆரோக்கியமும் கூட.

- Advertisement -

நாம் செய்யும் பிரியாணி தக்காளி சாதம் இவைகளில் கொத்தமல்லி புதினா சேர்த்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை எடுத்து சாப்பிட மாட்டார்கள் அப்படியே ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால் இந்த கொத்தமல்லியில் பலவிதமான நன்மைகள் உண்டு. உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிக்கும். எனவே இந்த கொத்தமல்லியை அரைத்து செய்யும் கொத்தமல்லி சாதம் உடலுக்கு ஆரோக்கியமாகவும் சாப்பிடவும் ருசியாகவும் இருக்கும். இந்த கொத்தமல்லி சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க

Print
3.75 from 4 votes

கொத்தமல்லி சாதம் | Coriander Rice Recipe In Tamil

நாம் செய்யும் பிரியாணி தக்காளி சாதம் இவைகளில் கொத்தமல்லி புதினா சேர்த்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை எடுத்து சாப்பிட மாட்டார்கள் அப்படியே ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால் இந்த கொத்தமல்லியில் பலவிதமான நன்மைகள் உண்டு. உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிக்கும். எனவே இந்த கொத்தமல்லியை அரைத்து செய்யும் கொத்தமல்லி சாதம் உடலுக்கு ஆரோக்கியமாகவும் சாப்பிடவும் ருசியாகவும் இருக்கும். இந்த கொத்தமல்லி சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time9 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: coriander rice
Yield: 4
Calories: 38kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1 கப் அரிசி
  • 1 கப் தண்ணீர்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • இஞ்சி சிறிதளவு
  • 8 பற்கள் பூண்டு 
  • 1 டீஸ்பூன் உப்பு
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 பிரியாணி இலை
  • 5 முந்திரி
  • 1 நட்சத்திர சோம்பு
  • 1 ஏலக்காய்
  • 1 கப் கொத்தமல்லி இலைகள்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்

செய்முறை

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலைகள் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ,ஏலக்காய் ,நட்சத்திர சோம்பு, முந்திரி மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  • வெங்காயம் வதங்கிய பிறகு அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  •  
    பச்சை வாசனை போன பிறகு அரை மணி நேரம் ஊற வைத்த ஒருகப் அரிசியை சேர்த்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் விட்டு இறக்கினால் கொத்தமல்லி சாதம் தயார்
  • மதிய உணவிற்கு என்ன கொடுத்து விடுவது என்று குழப்பமாக இருந்தால் இந்த கொத்தமல்லி சாதத்தை ஒரு நாள் செய்து பாருங்கள் சுவையும் அருமையாக இருக்கும் உடலுக்கு ஆரோக்கியமும் கூட.

Nutrition

Serving: 600g | Calories: 38kcal | Carbohydrates: 4.5g | Protein: 18g | Fat: 0.1g | Fiber: 1.7g | Vitamin A: 45IU | Vitamin C: 40mg | Calcium: 2mg